இத்தாலியின் வடகிழக்கு பகுதியில் உள்ள புகழ்பெற்ற நகரம் வெனிஸ், பல தீவுகளின் ஒருங்கிணைப்பால் உருவானது.
150 வாய்க்கால்களுக்கு நடுவிலுள்ள 117 தீவுகளின் ஒருங்கிணைந்த பகுதியான வெனிஸ் முழுவதும் குறுக்கும், நெடுக்குமாக ஓடும் கால்வாய்களே போக்குவரத்திற்காக பயன்படுத்தப்படுகின்றன.
ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்வதற்கு “கோண்டலா” எனப்படும் படகுகளை பயன்படுத்துகின்றனர்.
இந்த நகரத்தின் அனைத்து கட்டிடங்களும் தண்ணீருக்குள்தான் கட்டப்பட்டுள்ளன.
இத்தகைய சிறப்பு மிக்க வெனிஸ், ஆண்டுக்கு 1 மில்லி மீட்டர் வரை கடலில் மூழ்கி வருவது கவலை தரும் விடயங்களில் ஒன்று.
வெப்பமயமாதலால் 2 முதல் 10 மில்லிமீட்டர் வரை மூழ்கி வரும்போது, இயற்கையாகவும் ஆண்டுதோறும் புள்ளி 8 லிருந்து 1 மில்லி மீட்டர் வரை மூழ்குவதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
இதுமட்டுமல்லாது கடல்நீர் மட்டம் உயர்வதும் இதற்கு காரணம் என இத்தாலியின் படுவா பல்கலைகழக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
|
தொலைக்காட்சி!!
இந்த வலைப்பதிவில் தேடு
சனி, 4 அக்டோபர், 2014
ஐரோப்பாவின் மிதக்கும் நகரம் “வெனிஸ்” (வீடியோ இணைப்பு) !
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக