தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 28 அக்டோபர், 2014

தியானம் செய்வதினால் என்ன பயன்?


ஒவ்வொரு மனிதருக்கும் மன அமைதி என்பது அவசியம் தேவை .இல்லையென்றால் மன அமைதி இல்லையென்றால் ஒரு வெறுப்புடனும், மன வியாதியுடனும், திருப்தி இல்லாமலும், ஏமாற்றத்துடனும், கவலைகளுடனும் வாழ வேண்டிய நிர்பந்தம் ஏற்படும்.

ஒருவர் பயத்துடனும், பொறாமையுடனும், கவலைகளில் இருந்து விடுபட முடியாமல் வாழ்வதற்கும் இந்த மனமே முக்கிய காரணமாகிறது. இவைகள் அனைத்தும் வாழ்க்கையிலும், தொழிலும், வேலை செய்யும் இடத்திலும் பின் கோபமாகவும், தவறான முடிவு எடுப்பதற்கு காரணமாகவும் ஆகின்றது.
உறுதியான மனம், நிலையான மனம் இல்லையென்றால் இதுபோன்ற மனம் சார்ந்த பிரச்சனைகள் உருவாக ஏதுவாகிறது.

சரி. மனம் சார்ந்த பிரச்சனைகளில் இருந்து விடுபட வேறு வழி இல்லையா?

ஏன் இல்லை. நிச்சயமாக இருக்கிறது.

தியானம் ஒன்றுதான் மனம் சார்ந்த பிரச்சனைகளில் இருந்து விடுபட ஒரே வழி. தியானம் ஒன்றுதான் பக்க விளைவுகள் இல்லாத இயற்கையாக மனம் சார்ந்த பிரச்சனைகளில் இருந்து வெளியே வர ஒரே வழி.

தியானம் தொடர்ந்து செய்யும்போது மனது ஆனது சரியான வழியில் செல்லும். சரியாக முடிவு எடுக்க சொல்லும். மனது சரியான வழியில் சென்று கொண்டு இருக்கும்போது நல்ல உடல் ஆரோக்கியத்திற்கும் தியானம் வழி வகுக்கிறது.

மனமானது இயற்கையிலேயே கலப்படம் இல்லாதது. ஆனால் வாழ்க்கையில் நாம் சந்திக்கும் நிகழ்வுகள் எல்லாம் பயம், பொறாமை போன்றவை எல்லாம் கவலைகளாகவும் கோபமாகவும் மாறி தவறான முடிவுகள் எடுப்பதற்கு வழி
வகுக்கின்றது.

மன குழப்பங்கள்தான் ஒரு மனிதரை வாழ்க்கையில் கஷ்டப்பட வைக்கிறது.
தியானம் செய்யும்போது மன குழப்பங்கள் அகன்று மனதினை சரியாக சிந்தனை செய்ய வைக்கின்றது.

மனதினை சரியாக சிந்திக்க வைப்பதற்கு கடுமையான உடலை வருத்தி உடற் பயிற்சிகள் எதுவும் செய்ய வேண்டாம். தியானம் என்பது ஒரு சதவீதம் கூட உடலை வருத்தாமல் எந்த வலியும் இல்லாமல் செய்யப்படும் மன பயிற்சி ஆகும்.

ஒரு நாளில் சில மணித்துளிகள் செய்யும் தியானம் மூலம் மனதினை குணப்படுத்தி உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பல நன்மைகள் பெறலாம்.

தியானம் செய்து வரும்போது மனம் சார்ந்த வியாதிகளில் இருந்தும், வியாதிகளில் இருந்தும் குணம் ஆகலாம் என்று விஞ்ஞான பூர்வ ஆராய்சிகள் தெரிவிக்கின்றன.

தியானம் என்பது ஜாதி, மதம், இனத்திற்கு அப்பாற்பட்டது. யார் வேண்டுமானாலும் தியானம் செய்யலாம். ஒருவர் மாணவராக இருக்கலாம், குடும்ப தலைவியாக இருக்கலாம், அலுவலகம் செய்வோர், வியாபாரிகள், தொழில் புரிவோர், இளைஞர்கள், முதியவர்கள் யார் வேண்டுமானாலும் தியானம் செய்யலாம்.

தியானம் செய்யும் போது மனதினுடைய இயக்கம் குறையபடுகிறது. அதனால் மனதிற்கு ஓய்வு கிடைக்கிறது. மனது ஓய்வு அடையும்போது உடலுக்கும் நல்ல ஓய்வு கிடைக்கிறது. மனதுக்கும் உடலுக்கும் போதுமான ஓய்வு கிடைக்கும்போது குடும்ப சூழ்நிலைகளாலும், வேலை அல்லது தொழில் செய்யும் இடத்தில உருவாகும் பயம், பொறாமை, கவலைகள், tension போன்றவை கலையபடுகிறது அல்லது இயற்கையாகவே விலகுகிறது.

20 நிமிடங்கள் செய்யப்படும் தியானத்தினால் கிடைக்கும் ஓய்வு 6 மணி நேரம் தூங்கும்போது கிடைக்கும் ஓய்வை விட அதிகமானது.

தியானம் செய்யும்போது உடலில் உள்ள blood பிரஷர் அளவு சரியான அளவில் நிலை நிறுத்தபடுகிறது. High Blood Pressure அல்லது Low Blood Pressure
என்ற பேச்சுக்கே இடம் இல்லை. தியானம் செய்வதற்கு முன்பும் பின்பும் சிலரை வைத்து ஆராய்ச்சி செய்து இந்த உண்மை கண்டறியப்பட்டுள்ளது.

இது போன்று பல உடல் ரீதியாக கிடைக்கும் நன்மைகள் தியானம் செய்வதினால் கிடைக்கின்றன என்று விஞ்ஞான பூர்வமாக நிரூபிக்கப்பட்டு உள்ளன.

தியானம் மூலம் மன ரீதியாக அமைதி கிடைக்கும்போது வாழ்க்கை, தொழில், வேலையில் குறிக்கோள்களை இலகுவாக அடைய ஏதுவாகிறது.

மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் ஏற்படும் பிரச்சனைகளை சரி செய்ய தியானம் சிறந்த பக்க விளைவில்லாத மருந்தாக செயல் படுகிறது.

எனவே தியானம் செய்யும்போது உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பல வித பலன்களை பெறலாம் என்பதில் சந்தேகம் இல்லை.

சாம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக