தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 24 அக்டோபர், 2014

உங்க இன்டெர்நெட் மெதுவா இருக்கா? இத டிரை பண்ணுங்க

சில சமயங்களில் நீங்கள் பயன்படுத்தும் இன்டெர்நெட் உங்களை அதிமாகவே சோதித்து பார்க்கும்.
அந்த நேரங்களில் நாம் எந்த அளவு அவதிப்படுகிறோம் என்பது நமக்கு மட்டுமே தெரியும்.
சிலர் இப்படி எல்லாம் செய்தால் உங்கள் இன்டெர்நெட் வேகமாக இருக்கும் என கூறியிருப்பார்கள். ஆனால் உண்மையில் செய்ய வேண்டிய விடயம் இது மட்டுமே,
சுத்தம்
கணனியை அவ்வப்போது சுத்தம் செய்து கொள்ளுங்கள். அதே போல் உங்கள் இன்டெர்நெட் சேவையை அப்கிரேடு செய்திடுங்கள், இதுவும் வேகமான இன்டெர்நெட்டுக்கு உதவும்.
ப்ரவுஸர் அப்டேட்
அவ்வப்போது உங்க ப்ரவுஸரை அப்டேட் செய்யுங்கள், இது ஓரளவு வேகமான இன்டெர்நெட்டுக்கு வழி்வகுக்கும்.
டிஸ்ட்ராய் ஆட்வேர்
இதை பயன்படுத்தி உங்க இன்டெர்நெட்டின் வேகத்தை குறைக்கும் மென்பொருள்களை டெலீட் செய்திடுங்கள். இதன் மூலம் இன்டெர்நெட் வேகம் அதிகரிக்கும்.
நெட்வர்க் செக்யூரிட்டி
வயர்லெஸ் நெட்வர்க் பயன்படுத்தினால் பாதுகாப்பான பாஸ்வேர்டை பயன்படுத்தி வேறு யாரும் உங்கள் இன்டெர்நெட்டை பயன்படுத்தாமல் பார்த்து கொள்ளுங்கள்.
டோன் டவுன் எபெக்ட்ஸ்
உங்கள் இன்டெர்நெட்டை வேகமாக இயக்க எளிய வழிமுறை உங்க கம்ப்யூட்டரில் இயங்கும் விஷுவல் எபெக்ட்ஸை ஆஃப் செய்து விடுங்கள்.
இதற்கு உங்க கம்ப்யூட்டரின் கன்ட்ரோல் பேனல் - அட்வான்ஸ்டு சிஸ்டம் செட்டிங்ஸ் - சிஸ்டம் ப்ராப்பர்டீஸ் - அட்வான்ஸ்டு டேப் சென்று செலக்ட், டீசெலக்ட் விஷுவல் எபெக்ட்ஸ் தெரிவு செய்யலாம்.
வைரஸ்
உங்க கணனியில் வைரஸ் இருந்தாலும் இன்டெர்நெட் வேகம் குறையலாம். அதனால் சரியான ஆன்டிவைரஸை பயன்படுத்துங்கள்.
பேக்கிரவுண்டு
சில சமயம் உங்க இன்டெர்நெட் வழக்கத்திற்கும் குறைவாக இருந்தால் முதலில் உங்க ப்ரவுஸரின் டவுன்லோடு மேனேஜரை பாருங்கள். உங்களுக்கு தெரியாமல் உங்களுடைய ஏதாவது ஒரு சாப்ட்வேர் அப்டேட் ஆனாலும் இன்டெர்நெட் மெதுவாகத் தான் இருக்கும்.
ஸ்பேஸ்
சில கணனிகளில் சரியான ஸ்பேஸ் இல்லாவிட்டாலும் கணணியை மெதுவானதாக மாற்றி விடும். அதனால் கணனியில் ஸ்பேஸூக்கு முக்கியதுவம் கொடுங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக