தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 26 அக்டோபர், 2014

நீங்க ஸ்மார்ட் போன் பைத்தியமா? இதோ சுவையான தகவல்!

நீங்கள் உங்களுடைய ஸ்மார்ட் போனை வாரத்திற்கு 1,500 முறை வெளியே எடுத்து பார்க்கலாம் என்கிறது புதிய ஆய்வு.
டெக்மார்க் மார்கெட்டிங் நிறுவனம் சார்பில் 2,000 பேரிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வு அவர்கள் சராசரியான வாரத்துக்கு 1,500 முறை ஸ்மார்ட் போனை எடுத்துப் பார்ப்பதாகவும், தினமும் 3 மணி நேரம் அதன் திரையை மட்டுமே பார்த்துக்கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
இந்த விடயம் வழக்கமாக உள்ளது என்றாலும், பலரும் ஸ்மார்ட் போனை எதற்கு வெளியே எடுத்துப் பார்க்கிறோம் என்ற உணர்வே இல்லாமல் தன்னிச்சையாக அவ்வாறு செய்வதாகக் கூறியுள்ளனர்.
அது போலவே தங்களை அறியாமலே ஃபேஸ்புக் மற்றும் இமெயிலைத் திறந்து பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
மேலும் சராசரியாக, 221 செயல்களுக்காக ஸ்மார்ட் போனை நாடுவதாகவும் இந்த ஆய்வு தெரிவிக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக