இறந்து போன இதயத்தை மீண்டும் உயிர்ப்பித்து மற்றொரு நோயாளிக்கு வெற்றிகரமாக பொருத்தி மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள செயின்ட் வின்சென்ட் மருத்துவமனை மருத்துவர்களே இச்சாதனையை நிகழ்த்தியுள்ளனர்.
கடந்த இரண்டு மாதங்களில் இதுபோன்று இரண்டு அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன.
இறந்த ஒருவரின் இதயத்தையும் உயிர்ப்பித்து மாற்று அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்த முடியும் என நிரூபிக்கப்பட்டுள்ளது மருத்துவ உலகின் புதிய மைல்கல்லாகும்.
இதுவரையிலும் மூளைச்சாவு அடைந்த ஒருவரிடமிருந்தே உயிர் உள்ள இதயம் பெறப்பட்டு அறுவை சிகிச்சை நிகழ்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக