தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 24 அக்டோபர், 2014

கல்குடா கடலில் உலக போர் காலத்து விமானத்தின் பாகங்கள்!



மட்டக்களப்பு கல்குடா கடற்கரையில் இருந்து 10 கீலோ மீற்றர் தூரத்தில் உள்ள கடலில் 42 மீற்றர் ஆழத்தில் உலக போரின் போது மூழ்கியதாக கூறப்படும் விமானங்களின் பாகங்கள் கிடைத்துள்ளதாக கடல் தொல்பொருள் ஆய்வில் ஈடுபட்டுள்ள தர்ஷன ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
2013 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மீனவர் ஒருவரின் வலையில் சிக்கிய அலுமனியம் துண்டு ஒன்றை அடிப்படையாக கொண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இந்த விமான பாகங்கள் கிடைத்துள்ளன.
 கடலில் இருந்து கிடைத்த இந்த விமான பாகங்கள் கெட்டலினா விமானத்தின் பாகங்கள் என்பது தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கெட்டலினா விமானங்கள் உலக போரின் போது உளவு பார்ப்பதற்காக பயன்படுத்தப்பட்டன.
பாரிய விமானமான இந்த விமானம் சுமார் 18 மணிநேரம் பறக்கக் கூடியது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக