தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 26 அக்டோபர், 2014

சண்டே ஸ்பெஷல்- பைனாப்பிள் செர்ரி ஐஸ்கிரீம்


சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ரொம்ப பிடித்தமான ஒன்று ஐஸ்கிரீம் தான்.
அதுவும் குழந்தைகளுக்கு ஐஸ்கிரீம் என்றால் கொள்ளை பிரியம், கடைகளில் வாங்குவதை விட வீட்டிலேயே சுவையான ஐஸ்கிரீம் செய்யலாம்.
பைனாப்பிள் செர்ரி ஐஸ்கிரீம்
தேவையான பொருட்கள்
நறுக்கிய அன்னாசிப் பழம் - 1 கப்.
அன்னாசி எசென்ஸ் - 3 துளிகள்.
சர்க்கரை - 1 கப், க்ரீம் - 1/2 கப்.
கஸ்டர்ட் பவுடர் - 2 டேபிள்ஸ்பூன்.
பால் - 1 கப்.
செர்ரி - 8.
செய்முறை
கடாயை அடுப்பில் வைத்து, அன்னாசி, சர்க்கரை சேர்த்து மிதமான சூட்டில் அன்னாசி மென்மையாகும் வரை வதக்கவும்.
பிறகு இக்கலவையை ஆரவைத்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.
அதன்பின் பாலை காய்ச்சியவுடன், கஸ்டர்ட் பவுடரை சிறிது பாலில் கரைத்து ஊற்றி, மிதமான தீயில் சுட வைக்கவும்.
பால் நன்கு கெட்டியானவுடன் இறக்கி ஆற வைத்துக் கொள்ள வேண்டும்.
இதில் அரைத்த அன்னாசி, க்ரீம், எசென்ஸ் சேர்த்து நன்கு கலக்கவும்.
இந்த கலவையை ஒரு மணிநேரம் ஃப்ரீசிரில் உறைய வைக்கவும்.
பின்பு எடுத்து மிக்ஸியில் நன்கு அரைத்து விடவும், இப்படியே தொடர்ந்து 4 அல்லது 5முறை செய்து வந்தால் சுவையான ஐஸ்கிரீம் தயாராகிவிடும்.
இதில் வெட்டி வைத்துள்ள செர்ரி பழங்களை கலக்கி விட்டால் ரெடி!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக