தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 22 அக்டோபர், 2014

தீபாவளி லேகியம் செய்வது எப்படி? வயிற்றையும் கவனியுங்கள்!

தீபாவளி என்றதுமே பட்டாசுகளுக்கும், ஸ்வீட்டுகளுக்கும் தான் முதலிடம்.
நிறைய ஸ்வீட் சாப்பிடதுனால, செரிமானத்தில் பிரச்னை ஏற்படும், எனவே அஜீரணக் கோளாறுகளை நீக்குவதற்கு தீபாவளி லேகியத்தை கண்டிப்பாக செய்து சாப்பிடுங்க.
தேவையான பொருட்கள்
தனியா- அரை கப்.
ஓமம்- 50 கிராம்.
சுக்கு, மிளகு, திப்பிலி- தலா 10 கிராம்.
இஞ்சி சாறு- அரை கப்.
வெல்லம் அல்லது கருப்பட்டி- 100 கிராம்.
நெய்- கால் கப்.
ஏலக்காய் தூள்- சிறிது
செய்முறை
தனியாவை அரைமணி நேரம் ஊற வைத்து மிக்சியில் நன்கு அரைத்து வடிகட்டி வைக்கவும்.
பிறகு சுக்கு, மிளகு, திப்பிலி, ஓமத்தை மிக்சியில் போட்டு நைசாக பொடி செய்து கொள்ளவும்.
அடி கனமான கடாயில் தனியா விழுது, பொடி செய்து வைத்துள்ள கலவை இரண்டையும் சேர்த்து வெல்ல துருவலும் சேர்த்து அடுப்பில் வைக்கவும், விடாமல் கிளறிக் கொண்டே இருக்கவும்.
கலவை நிறம் மாறி, டார்க் பிரவுன் கலரில் வரும் போது இறக்கி, ஏலக்காய் தூள் சேர்த்தால் தீபாவளி லேகியம் ரெடி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக