ஏன் என்று தெரியாமலே சில பழக்க வழக்கங்களை ஏற்றுக் கொள்ளுதல் முந்தைய தலைமுறையோடு அழிந்துவிட்டது . இப்பொழுதெல்லாம் பகுத்து அறிவதனால் சில மூட நம்பிக்கைகளை தூக்கி எறிந்து தேவையானவற்றை எடுத்து கொள்கிறோம் .
"வீட்டில் மஹாபாரதம் படித்தால் வீட்டிற்கு ஆகாது' என்ற கூறுவதுண்டு. அறம் வளர்க்கும் நல்ல பிராமணனுக்கு பசு தானம் செய்வதை விட, மஹாபாரதம் படித்தல் புண்ய காரியம் என்கிறது பாரதம். இத்தனை விளக்கங்கள் வியாக்கியானங்கள் தாண்டியும் பலரும் பாரதத்தை வீட்டில் படிப்பதில்லை.
ராமாயணம் புனித நூல் என்றால் மஹாபாராதம் ஏன் வீட்டிற்கு ஆகாது? கிருஷ்ணின் கீதோபதேசம் படம் மனையில் இருத்தல் சுபீக்ஷம் என்றால், ஏன் மஹாபாரதம் படித்தல் உகந்ததாக கருதப்படவில்லை?
எந்த ஒரு செயலுக்கும் சம்பிரதாயத்திற்கும் மனையிலும், சுற்றுப்புறத்திலும், நல்லிணக்கமும், நல்லெண்ணம், பரிவு, தயை, நன்னடத்தை முதலியன புகட்டுவதே நோக்கமாக இருக்கும். இராமாயணத்தில் பக்தி, பொறுமை, தயை, ஒழுக்கம் முதலியன அதிகம் காணப்படுவதால் அதனைப் மிகப் புனித நூலாக போற்றுகிறார்கள்.
மஹாபாரதக் கதைகள் த்ரேதாயுகத்தின் முடிவில் நடை பெற்றதால், தர்மத்திற்கு புறம்பான கதைகள் நிறையவே நடைபெற்றுள்ளன. சூதாட்டமும், மனையாளை பணயமாக வைத்து சூதாடுவதும், பல கதாபாத்திரங்களின் குணங்களும், நடத்தையும், பொதுவாக மனிதன் தன்னை உயர்த்திக் கொள்ள வழிவகுக்கும்படியாய் அமையவில்லை என்றும் , ஜெயிப்பதை மட்டுமே குறியாகக் கொண்டதால் சில நேரங்களில் யுத்த நீதிகளும் கூட மீறப்பட்டிருக்கிறது என்றும் , இதனை படிக்கும் சாமான்யன் மனதில் குழப்பமும், நேர்மைக்கு புறம்பான கதைகளும் மனதில் பதியுமே அல்லாது தர்ம நியாயங்கள் முரண்பட்டு நிற்பதால் அவனுக்கு நன்மை அதிகம் விளையும் வாய்ப்பில்லை என்று கருதி நம் முன்னோர்கள் வீட்டில் , வீட்டில் மகாபாரதம் படிக்க கூடாது என்று கூறி வைத்தனர் .
இக்கால சந்ததியினர் பலரும் வீட்டில் மஹாபாராத கதைகளை விரும்பி படிக்கின்றனர் . இக்கால சந்ததியினரின் பகுத்தறிவிற்கு இதுவும் ஒரு சான்றாகும் . ஒரு மனிதன் எப்படி இருக்க கூடாது என்பதனைவிட , எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்பதனை மஹாபாராதம் மூலம் பகுதறியலாம் என்பதற்கு இக்கால தலைமுறையினரே சிறந்த சான்று .
அனைவருக்கும் என் இனிய வணக்கம் இந்த நாளும் இனிய நாளாக வாழ்த்துக்கள் ~ சாம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக