உடல் ஆரோக்கியத்திற்கு உடற்பயிற்சி எவ்வளவு முக்கியம் என்பது அனைவருக்கும் தெரிந்த விடயமாகும்.
ஆனால் அதே அளவு முக்கியத்துவம் வாய்ந்தது அந்த உடல் பயிற்சிக்கு பிறகு தவிர்க்க வேண்டிய உணவுகளை பற்றி தெரிந்து வைத்துக் கொள்வது.
நம் உடலுக்கு கிளைகோஜென் என்னும் வேதிப் பொருள் தான் உடலுக்கு சக்தியைக் கொடுக்கிறது. இவை உடற்பயிற்சிக்கு பிறகு உடலில் முழுவதாக காலியாகி விடுகிறது.
இவற்றை திரும்பப் பெற சத்து நிறைந்த உணவுப் பொருட்களை உண்ண வேண்டும். அதே சமயம் சில உணவுகளை தவிர்க்க வேண்டும்.
நார்ச்சத்து அடங்கிய உணவுகள்
உடற்பயிற்சிக்குப் பின் வெகு நேரம் கழித்து இவற்றை சாப்பிடலாம். இத்தகைய உணவுகள் உடலுக்கு நல்லது தான், ஆனால் உடற்பயிற்சிக்குப் பின் செரிமானப் பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. இவற்றுக்குப் பதில் ஆம்லெட், சாண்ட்விச், கீரை ஆகியவற்றை சாப்பிடலாம்.
பிட்சா
உடற்பயிற்சிக்குப் பின்னர் கண்டிப்பாக பிட்சாவையும் தவிர்க்க வேண்டும். இதில் உள்ள கொழுப்புச் சத்தை பற்றி அனைவருக்கும் தெரியும்.
தேங்காய் எண்ணெய்
விளையாட்டு வீரர்களுக்கு தேங்காய் எண்ணெய் நல்லது தான். ஆனால் உடற்பயிற்சிக்கு முன் இதை எடுத்துக் கொள்வது தான் நல்லது. இதில் கொழுப்பு அதிகம் என்பதால், உடற்பயிற்சிக்குப் பின் இதைத் தவிர்க்க வேண்டும்.
வெண்ணை
உடற்பயிற்சிக்குப் பின், நம் உடலில் இரத்தமானது வயிற்றுக்குள் செல்லாமல் வெளியே தான் பாய்ந்து கொண்டிருக்கும். அதனால், அப்போது ஒரே ஒரு ஸ்பூன் வெண்ணெய் மட்டும் சாப்பிட்டால் போதுமானது. இது செரிமானத்திற்கு உதவும்.
சொக்லேட்
உடற்பயிற்சிக்குப் பின்னர் கண்டிப்பாக சொக்லேட்டை சாப்பிடக் கூடாது. சொக்லெட்டுக்குப் பதில், கொக்கோ பவுடர் சாப்பிடலாம்; அதில் கொழுப்பு குறைவாகத் தான் இருக்கும். சொக்லெட் செரிமானப் பிரச்சனையை ஏற்படுத்தும் என்பதை நினைவில் வைக்க வேண்டும்.
முட்டை
உடற்பயிற்சிக்குப் பின் முழு முட்டையையும் சாப்பிடுவதாக இருந்தால், ஒரு முட்டை மட்டும் போதும். முட்டை ஒரு சத்தான உணவாக இருந்தாலும் ஒன்றிக்கு மேல் சாப்பிடுவது ஆரோக்கியமானதாக இருக்காது.
தயிர்
கொழுப்புச் சத்து அதிகமுள்ள தயிரை உடற்பயிற்சிக்குப் பின் தவிர்க்கவும். அந்தக் கொழுப்பைக் கரைக்க உடனே மீண்டும் ஒரு உடற்பயிற்சி செய்ய வேண்டியிருக்கும்.
பிரட்
பிரட்டில் குளூட்டென் மற்றும் சர்க்கரை அதிகம் இருப்பதால், உடலில் சர்க்கரை அளவு ஏறிவிடும் ஆபத்து உள்ளது. செரிமானத்திற்கும் நல்லதல்ல. வேண்டுமானால் பிரட்டை பச்சையாகத் திண்பது ஓரளவு நல்லது. டோஸ்ட் செய்த பிரட் சாப்பிடுவதை தவிர்க்கவும்.
மாட்டிறைச்சி
மாமிச உணவுகளை உடற்பயிற்சி முடிந்ததும் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். இவற்றில் கொழுப்புச்சத்து அதிகமிருப்பதால், இரத்தக் குழாய்களில் சென்று அடைத்துக் கொள்ளும். செரிமானப் பிரச்சனைகளும் ஏற்படும். அப்படி சாப்பிட வேண்டும் என்றால் சிக்கன் மட்டும் எடுத்துக் கொள்ளலாம்.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக