உலகிலேயே முதன்முறையாக ஜன்னல் இல்லாத டச் ஸ்கரீன் விமானம் விரைவில் வரவுள்ளது.
பிரித்தானியாவை சேர்ந்த விஞ்ஞானி ஒருவர் ஜன்னல்கள் இல்லாத தொடுத்திரை (ட்ச் ஸ்கிரீன்) விமானத்தை வடிவமைத்துள்ளார்.
இந்த தொழில்நுட்பம் வாயிலாக விமானத்தில் பயணம் செய்யும் பயணிகள் முழுமையாக வெளியில் உள்ளவற்றை பார்க்கலாம்.
வானத்தை தொடர்ச்சியாக பார்க்கக்கூடிய வகையில் வழக்கமான ஜன்னல்களுக்கு பதிலாக முழு நீள தொடுதிரைகள் பொருத்தப்படுவதால், பயணிகள் அவர்களது வசதிகளுக்கு ஏற்ப அந்த திரையை தொட்டு வானத்தை பார்க்கலாம்.
இதன் மூலம் விமானத்தில் எடை குறைவது மட்டுமின்றி எரிபொருளும் சிக்கனமாகும் என கூறப்படுகிறது. தற்போது இதற்கான மாதிரி வடிவம் கொண்ட காணொளி வெளியாகியுள்ளது.
மேலும் இந்த மாற்றம் இன்னும் 10 வருடங்களில் ஏற்படும் என விஞ்ஞானி தெரிவித்துள்ளனர்.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக