தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 19 அக்டோபர், 2014

தீபாவளி லேகியம் !!




தீபாவளி அன்று காலையில் எண்ணை தேய்த்துக் குளித்துவிட்டு பலகாரங்களை தின்பதால் தொண்டை கட்டு வரும். அதில்லாமல் வயிற்றில் அஜீரணம் ஏற்படும். மேலும் பட்டாசு புகையினாலும் சிலருக்கு சளி பிடிக்கும். இதனைத் தவிர்க்கத்தான் தீபாவளி லேகியம் தயாரிக்கப்படுகிறது. இந்த லேகியத்தை குளித்து விட்டு வந்து ஒரு உருண்டை வாயில் போட்டுக் கொள்ள வேண்டும். இந்த லேகியம் ரெடி பண்ண நேரமில்லாதவ்ர்கள் ஓமம், சுக்கு, வெல்லம் தலா ஒரு கரண்டி எடுத்து பொடி செய்து தேன் கலந்து சிறு சிறு உருண்டைகளாக பிடித்து ஆளுக்கு ஒன்று சாப்பிட தீபாவளி லேகியம் சாப்பிட்ட பலன் கிடைக்கும்.

தேவையான பொருட்கள்:
தனியா - அரை கப்
ஓமம் - 50 கிராம்
சுக்கு, மிளகு, திப்பிலி - தலா 10 கிராம்
இஞ்சி சாறு - அரை கப்
வெல்லம் அல்லது கருப்பட்டி - 100 கிராம்
நெய் - கால் கப்
ஏலக்காய் தூள் - சிறிது

செய்முறை:

தனியாவை அரைமணி நேரம் ஊற வைத்து மிக்சியில் நன்கு அரைத்து வடிகட்டி வைக்கவும். பிறகு சுக்கு, மிளகு, திப்பிலி, ஓமத்தை மிக்சியில் போட்டு நைசாக பொடி செய்து கொள்ளவும். அடி கனமான கடாயில் தனியா விழுது, பொடி செய்து வைத்துள்ள கலவை இரண்டையும் சேர்த்து வெல்ல துருவலும் சேர்த்து அடுப்பில் வைக்கவும்.

விடாமல் கிளறிக் கொண்டே இருக்கவும். கலவை நிறம் மாறி, டார்க் பிரவுன் கலரில் வரும் போது இறக்கி, ஏலக்காய் தூள் சேர்க்கவும். தீபாவளி லேகியம் ரெடி. தற்போது இந்த லேகியம் பவுடராகவும், ஏன் ரெடிமேட் லேசியமாகவும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கிறது. எப்படியோ இந்த தீபாவளிக்கு லேகியத்தை சாப்பிட மறக்காதீங்க.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக