தற்போதைய காலகட்டத்தில் பெரும்பாலானோர் சூரிய ஒளிப்பட்டாலே உடல் கருத்துவிடும் என எண்ணி முக்காடு போட்டுக்கொள்கின்றனர்.
ஆனால் இப்படி செய்வது தவறு, ஏனெனில் சூரியனில் உள்ள வைட்டமின் சத்து நமக்கு கிடைக்காமல் போகும்.
மனித உடலைக் கட்டமைக்கும் கம்பிகளாக விளங்கும் எலும்புகளின் வலிமைக்கு தேவையான வைட்டமின் டி 90 சதவீதம் சூரியஒளியில் உள்ளது.
நமக்கு நாளொன்றுக்கு தேவைப்படும் 400-600 இன்டர்நேஷனல் யூனிட் வைட்டமின் டி-ஐ, சூரிய ஒளியை நமக்குள் உள்வாங்குவதன் மூலம் பெற முடியும்.
இந்த வைட்டமின் டி குறைவதன் மூலம் எலும்பு வலுவிழந்து ஆஸ்டியோ பொரோசிஸ், ஆஸ்டியோமலாசியா போன்ற நோய்கள் ஏற்படுகின்றன.
ஆரோக்கியமான குழந்தைகளின் உருவாக்கத்திற்கு வைட்டமின் டி மிக மிக அவசியம், உடலில் ஏற்படும் புண்களை ஆற்றும் வல்லமையும் இதற்கு உண்டு.
சூரியன் உதிக்கும் நேரத்திலோ, சூரியன் மறைவதற்கு முன்போ நடைப்பயிற்சி மேற்கொள்வது வைட்டமின் டியை பெற வசதியாக இருக்கும்.
இது தவிர கடல் உணவுகளில் சாலமன் மீன்களிலும், சோயா பனீர், சோயா மில்க், காளான், முட்டையின் மஞ்சள் கரு, ஈரல், பால் மற்றும் மீன் எண்ணெய் மாத்திரைகளிலும் வைட்டமின் டி காணப்படுகின்றது.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக