தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 25 அக்டோபர், 2014

இந்த உணவுகளை மறக்காமல் சாப்பிடுங்க!

எப்போதும் நோயின்றி ஆரோக்கியமான வாழ்க்கைக்கு நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் அவசியம், எதிர்ப்பு சக்தி குறையும் பட்சத்தில் நோய்கள் வந்து குடியேறிவிடும்.
எனவே ஆரோக்கியமான மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகளை எடுத்துக் கொள்வது அவசியம்.
பூண்டு: இதயத்தின் நண்பனான பூண்டு ரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும், ஹார்மோன்களை கட்டுப்படுத்தவும் செய்கிறது, இதில் உள்ள அல்லிசின் என்னும் பொருள் பக்டீரியாக்களையும், தொற்றுகளையும் கொல்லவல்லது.
இஞ்சி: இஞ்சியில் ஆன்ட் ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்துள்ளதால், நுண்ணுயிர்களுக்கு எதிராக போராடும் சக்தி அதிகம் உள்ளது.
தயிர்: தயிரில் நிறைந்திருக்கும் நல்ல நுண்ணுயிர்கள் செரிமான உறுப்புகளை குறிப்பாக குடற்பகுதியை நல்ல நிலையில் வைக்க உதவுகின்றன. 
பார்லி, ஓட்ஸ்: பார்லியும் ஓட்ஸும் ஒரு முக்கியமான நார்ச்சத்தான பீட்டா&க்ளூக்கன் எனப்படும் நுண்ணுயிர் கொல்லும் மற்றும் உடலைக் காக்கும் குணங்களைக் கொண்ட பொருளைக் கொண்டுள்ளன. இவை மனித உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தும்.
சர்க்கரைவள்ளி கிழங்கு: சர்க்கரைவள்ளிக் கிழங்கு உடல் சருமத்தை தொற்று மற்றும் நுண்ணுயிர் தாக்குதலில் இருந்து காக்கிறது. உங்கள் சருமம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் முக்கிய பங்காற்றுகிறது.
பழங்கள்: நோய் எதிர்ப்பு சக்தியை தருவதில் பழங்கள் முதலிடத்தில் உள்ளன என்பதில் சந்தேகமில்லை. இவற்றில் வைட்டமின் பி1, சி, ஏ மற்றும் உலோகச்சத்துக்கள் அதிகம் உள்ளதால், உலகிலேயே மிக ஆரோக்கியமான உணவுகளில் ஒன்றாக உள்ளது. இது மேலும் உணவுப்பாதையை இயற்கையாகவே சுத்திகரிக்க வல்லது.
கீரைகள், காய்கறிகள்: பச்சை நிறக் கீரைகள் மற்றும் காய்கறிகள், வைட்டமின் பி1, ஏ மற்றும் சி சத்துக்களைக் அதிகம் கொண்டவை. இவற்றில் துத்தநாகச் சத்தும் அதிகம் உள்ளது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில், இந்த பச்சைக் காய்கறி மற்றும் கீரைகள் ஒரு சிறந்த உணவாகத் திகழ்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக