1. சளி, காய்ச்சல் என ஏதேனும் நோய் பாதிப்பு ஏற்பட்டால், உடனடியாக மருத்துவரிடம் காண்பிக்க வேண்டும்.
2. மகப்பேறு மருத்துவர் அல்லாமல் பொது மருத்துவரிடம் காண்பிக்க நேர்கையில், தான் தாய்மை அடைந்திருப்பதைச் சொல்ல வேண்டும்.
3. மருத்துவர் அதற்கேற்றபடி மருந்துகளைப் பரிந்துரை செய்வார்.
4. நீண்ட நேரம் நின்றுகொண்டு வேலை செய்பவர்கள், அவ்வப்போது உட்கார்ந்து ஓய்வு எடுக்க வேண்டும்.
5. உடலை வருத்திக்கொள்ளக் கூடாது.
6. இரவு நேரப் பணி செய்பவர்கள், பணி நேரத்தை அவர்களுக்குத் தக்கபடி மாற்றிக்கொள்வது நலம்.
7. முதல் மூன்று மாதங்களில் உடலையும் மனதையும் தேவை இல்லாமல் வருத்திக்கொள்ளக் கூடாது.
8. முதல் மூன்று மாதங்களில் கம்ப்யூட்டர் முன் நீண்ட நேரம் அமர்வது நல்லது அல்ல.
9. சேரில் நீண்ட நேரம் அமர்ந்து வேலை செய்பவர்கள் அடிக்கடி சிறிது தூரம் நடந்துவர வேண்டும்.
10. வாந்தியைத் தவிர்க்க அடிக்கடி சிறிய இடைவெளிவிட்டுச் சாப்பிட வேண்டும்.
11. தொலைதூரப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது.
12. சோர்வு ஏற்படுத்தக்கூடிய வேலைகளைச் செய்ய வேண்டாம்.
13. தாயின் கவனம் முழுக்கக் கருவில் வளரும் தன் குழந்தையின் மீது இருப்பது நலம்.
14 அடிவயிற்றில் வலியோ, லேசாக ரத்தக் கசிவு அல்லது ரத்தப்போக்கோ இருந்தால், உடனடியாக மகப்பேறு மருத்துவரை அணுக வேண்டும்.
லேசாகத்தானே இருக்கிறது என்று அலட்சியப்படுத்திவிடக் கூடாது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக