தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 31 அக்டோபர், 2014

கடலுக்கு அடியில் தொலைந்த நாகரீகம் (வீடியோ இணைப்பு)!


உலகின் வெளிப்படுத்தப்படாத மர்மங்களுள் ஒன்றாகக் கருதப்படும் அட்லாண்டிஸ் என்ற தொலைந்த நகரம் எங்கே இருந்தது? இப்போது எங்கே இருக்கிறது?
இதன் அழிவுக்குக் காரணம் என்ன? போன்ற பல கேள்விகளுக்கு இன்று வரை சரியான பதில் கிடைக்கவில்லை.
கிரேக்கத்தில் வாழ்ந்த தத்துவ அறிஞரான பிளேட்டோ தான், முதன் முதலில் அட்லாண்டிஸ் பற்றிக் 2000 ஆண்டுகளுக்கு முன்னதாக குறிப்பிட்டுள்ளார்.
அட்லாண்டிசின் கட்டிடக்கலை, பொறியியல் துறை, விழாக்கள் பற்றியும் குறிப்பிட்ட பிளேட்டோ இது கற்பனைக் கதையல்ல என்றும் இது யாராலும் கற்பனை செய்து பார்க்க முடியாத ஒரு சிறந்த இடமாக விளங்கியது எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் மனதைக் கொள்ளை கொள்ளும் வகையில் மையப் பகுதியில் சுற்றுச் சுவரோடு மூன்று கால்வாய்களை ஊடறுத்து அமைந்திருந்த அதன் தலைநகர் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.
அட்லாண்டிஸின் செல்வச் செழிப்புப் பற்றிக் பிளேட்டோ குறிப்பிடுகையில், வேறு எந்த ராஜ மாளிகையிலும் காண முடியாத அளவிட முடியாத அளப்பரிய செல்வம் அங்கு குவிந்து கிடந்தது எனவும் அதுவே அட்லாண்டிஸின் அழிவுக்கு வழி வகுத்திருக்கலாம் என்றும் தெரிவித்திருந்தார்.
மேலும் அவர் அங்கு வாழ்ந்த மனிதர்கள் பற்றிக் குறிப்பிடுகையில், அவர்கள் ஏனைய மனிதர்களோடு ஒப்பிட முடியாத அளவுக்கு அழகாலும் அறிவாலும் செல்வத்தாலும் மேம்பட்டிருந்தாக தெரிவித்துள்ளார்.
பின்னர் ஒரு துயரமான நாளில் ஏற்பட்ட பெரும் சுனாமியால் அட்லாண்டிஸ் முழுவதுமே கடலால் விழுங்கப்பட்டது.
அதோடு அந்த இடமும் ஒருவராலும் தேடிக் கண்டு பிடிக்க முடியாத, ஒருவராலும் கடக்க முடியாத இடமாகிவிட்டது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது எந்த காலப்பகுதியில் நிகழ்ந்தது என்று இதுவரை தெரியாததால் அட்லாண்டிஸின் காலப்பகுதியும் தெரியவில்லை.
ஆனால் அட்லாண்டிஸ் இருந்ததற்கான சாத்தியப்பாடுகள் நிறைய இருந்தாலும் அதனை நிரூபிப்பதற்கான விஞ்ஞானபூர்வமான ஆதாரங்கள் இன்று வரை கிடைக்காததே அட்லாண்டிஸ் மீதான சுவாரஸ்யத்தையும் தேடலையும் அதிகரித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக