நமது அன்றாட வாழ்வில் சரியாக உணவு முறையை கடைபிடித்தாலே ஆரோக்கியமான வாழ்வை பெற முடியும்.
இன்றைய இயந்திர உலகத்தில் காலையில் பள்ளிக்கும், அலுவலகத்துக்கும் செல்லும் அவசரத்தில் ரொட்டி, பிஸ்கட் போன்ற எதையாவது ஒன்றை வேகவேகமாக சாப்பிட்டு விட்டு சென்று விடுகிறோம்.
இது மிகவும் தவறு. காலை சத்தான உணவை நிச்சயமாக சாப்பிட வேண்டும். அதுதான் ஆரோக்கியத்துக்கு ஏற்றது.
அதேபோல் மதிய உணவுக்கு முக்கியத்துவம் கொடுத்து நல்ல முறையில் அமைத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.
மதிய வேளையில் பழங்கள், காய்கறிகள், தானியங்கள், பருப்பு வகைகள், பால் பொருட்கள் உள்ளிட்டவை உணவில் நிறைந்திருக்க வேண்டும்.
அதிக உடல் பருமன் கொண்டவர்கள் இதில் பால் பொருட்களை தவிர்த்து விடலாம். சாதத்துடன், காய்கறிகள், அவித்த மூக்கடலை, காராமணி போன்றவற்றை சாப்பிடலாம்.
சில சமயங்களில் தயிர் பச்சடி செய்து அதில் கேரட், வெங்காயம், வெள்ளரி என பிடித்த காய்கறிகளை சேர்த்துக் கொள்ளலாம்.
அசைவ பிரியர்கள் மதிய வேளையில் ஒரு முட்டையை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். மேலும் காய்கறிகளை நறுக்கி உப்பு போட்டு பச்சையாக சாப்பிடுவதும் உடலுக்கு மிகவும் நல்லது.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக