நிறைய சாப்பிடுறாங்க, ஆனா எப்படி இவ்வளவு ஒல்லியா இருக்காங்க என பலரும் சொல்ல கேள்விப்பட்டிருப்போம்.
உலகில் பெரும்பாலான நபர்களுக்கு கட்டுடல் மேனியுடனும், வசீகரிக்கும் முகத்துடனும் வலம்வர வேண்டும் என்று தான் ஆசை.
ஒல்லியாக இருக்கும் பலரை பார்த்திருப்போம், அவர்கள் நிறைய சாப்பிடுவார்கள், ஆனாலும் ஒல்லியாகத் தான் இருப்பார்கள்.
இது எப்படி சாத்தியம் என்றெல்லாம் யோசித்திருப்போம்.
அவர்கள் ஒரே சமயத்தில் வயிறு நிரம்ப சாப்பிடாமல் அவ்வப்போது ஏதேனும் சிறிது சிறிதாக சாப்பிடுவார்கள்.
இப்படி போதிய இடைவெளி விட்டு சாப்பிடுவதால், செரிமான மண்டலம் சீராக இயங்கி, கொழுப்புகள் தங்குவதை தடுக்கிறது.
அதே சமயம் தண்ணீரை அதிகம் குடிப்பதோடு உடற்பயிற்சி, விளையாட்டு போன்றவற்றில் ஈடுபட்டு எப்போதும் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும்.
ஒல்லியாக இருக்க விரும்புபவர்கள் தினமும் குறைந்தது 3 லிட்டர் தண்ணீரை குடிக்க வேண்டும். இதனால் உடலில் தங்கியுள்ள நச்சுக்களானது உடலில் இருந்து வெளியேறி, உடலை ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்புடனும் வைத்துக் கொள்ள உதவும்.
மேலும் சிட்ரஸ் பழங்களையும், கசப்பான உணவுகளையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு சாப்பிட்டால் உடலில் கொழுப்புகள் தங்குவதில்லை. மேலும் எவ்வித நோயும் அவ்வளவு எளிதில் தாக்குவதில்லை.
மிக முக்கியமானது இரவு நேர தூக்கம், தினமும் குறைந்தது 7 மணிநேரம் ஆவது தூக்கம் அவசியம்.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக