தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 20 அக்டோபர், 2014

தீபாவளிக்கு ஸ்வீட் செய்றீங்களா? உங்களுக்கு ஓர் எச்சரிக்கை தகவல் (வீடியோ இணைப்பு)

இனிப்பு என்றாலே சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே கொள்ளை பிரியம்.
அதுவும் தீபாவளி கொண்டாட்டங்களில் முக்கிய இடம் பிடிப்பது இனிப்புகள் தான்.
பெரும்பாலும் வீட்டிலேயே தாய்மார்கள், குடும்பத்தினருக்கு பிடித்த இனிப்பு வகைகளை தயார் செய்வர்.
இதற்காக பயன்படுத்தப்படும் முக்கிய உணவு பொருள் தான் “வெல்லம்”.
இந்த வெல்லத்தில் அதிபயங்கரமான உண்மை ஒளிந்திருக்கிறது.
அதாவது வெல்லம் தயார் செய்யும்போது, மிக வெண்மையாகவும் மக்களை ஈர்க்கும் வண்ணமும் இருக்க வேண்டும் என்பதற்காக உயிரைக் கொல்லும் பூச்சிக்கொல்லி மருந்துகளை கலக்கின்றனர்.
அதுமட்டுமல்லாது சாயப்பட்டறைகளில் பயன்படுத்தும் இரசாயனங்களையும் உபயோகப்படுத்துகின்றனர்.
இவ்வாறு தயாரிக்கப்படும் வெல்லம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதே இதற்கு காரணமாம்.
ஆனால் இது ஆரோக்கியமான ஒன்றாக இருக்குமா? மக்களே சற்று சிந்தித்து பாருங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக