எப்போதும் இளமையா, ஹேண்ட்சம்மா இருக்க வேண்டும் என்று தான் ஆண்கள் பலரும் விரும்புவார்கள்.
நல்ல பழக்கவழக்கங்கள், ஆரோக்கியமான உணவு முறை மற்றும் உடற்பயிற்சியின் மூலம் இளமையாகவும், சுறுசுறுப்பாகவும் இருக்கலாம்.
உங்களுக்கான டிப்ஸ்
* தினமும் ஷேவிங் செய்வதை முதலில் தவிர்த்து விடுங்கள், அவ்வாறு செய்யும் பட்சத்தில் முகத்தில் உள்ள தோல் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.
* முக்கியமாக கண்களுக்கு கீழே கருமை அண்டாமல் பார்த்துக் கொள்ளவும், வாரத்திற்கு இருமுறையாவது வெள்ளரி துண்டுகளை கண்களில் வைத்து எடுத்தால் ஆரோக்கியமாக இருக்கும்.
* தக்காளி சாற்றினை தினமும் முகத்தில் தடவி மசாஜ் செய்து உலர வைத்து கழுவி வந்தால், அது சருமத்திற்கு தேவையான வைட்டமின் சி, ஏ மற்றும் கே சத்துக்களை வழங்கி, சருமத்தை பொலிவோடும் அழகாகவும் வைத்துக் கொள்ளும்.
* கற்றாழை ஜெல்லை வாரத்திற்கு இருமுறை முகத்தில் தடவி வந்தால், கருமை நீங்கி பளபளப்பாக இருக்கும்.
* பாதி ஆப்பிளுடன், 5 ஸ்ட்ராபெர்ரியை சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும், இதில் கடலை மாவு கலந்து முகத்திற்கு தடவி 30 நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும்.
இப்படி வாரத்திற்கு ஒருமுறை செய்து வந்தால் கரும்புள்ளிகள், சருமத்தில் உள்ள சுருக்கங்கள் காணாமல் போய்விடும்.
* குறிப்பாக தினமும் குறைந்தது நான்கு முறையாவது முகத்தை கழுவுங்கள்.
|
தொலைக்காட்சி!!
இந்த வலைப்பதிவில் தேடு
செவ்வாய், 28 அக்டோபர், 2014
ஈசியா மற்றவர்களை மயக்கணுமா? சூப்பர் டிப்ஸ் !
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக