தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 29 அக்டோபர், 2014

நீளமான முடி வேண்டுமா? கைகொடுக்கும் யோகா!

பெண்கள் அனைவருக்குமே முடி நீளமாக, கருமையாக இருக்க வேண்டும் என்று தான் ஆசை.
ஆனால் இன்றோ முறையான உணவு பழக்கம் இல்லாததும், கண்ட கண்ட ரசாயனம் கலந்த பொருட்களும் முடியை பாழாக்கிவிடுகின்றன.
இதற்காக என்னதான் செயற்கை முறைகளை பின்பற்றினாலும், இயற்கையான மருந்துகள் மற்றும் யோகாவின் மூலம் நீளமான முடியை பெறலாம்.
சிர்ராசனா (Sirasasana )
இந்த ஆசனத்தில் ஒட்டுமொத்த உடல் எடையையும் தலையில் சமநிலை படுத்த வேண்டும், கையின் உதவி மூலம் தலையை கீழே தரையில் ஊன்றி நேராக நிற்க வேண்டும்.
இவ்வாறு தலைகீழாக நிற்பதால் தலைக்கு இரத்தம் சீராக சென்று தலைமுடிகளுக்கு ஊட்டம் அளிக்கும், அதுமட்டுமின்றி உடலுக்கு வலுவையும் தருகிறது.
சர்வன்காசனா(Sarvangasana)
தரையில் படுத்து கொண்டு, பின்னர் முதுகில் உடல் எடையை சமநிலைப்படுத்தி, கால்களை வானத்தை நோக்கி தூக்கி நிறுத்த வேண்டும்.
இதன் மூலம் தலைக்கு இரத்தம் ஓட்டம் அதிகரித்து முடி வளர செய்யும், மேலும் முடி கொட்டுவதையும் நிறுத்தும், தைராய்டு குறைபாட்டையும் நீக்கி நன்றாக சுவாசிக்க உதவுகிறது.
உஸ்தரசனா(Ustrasana)
இது மற்ற இரண்டை விட மிகவும் எளிதானது. முழங்கால் இட்டு முதுகை பின்புறம் வளைத்து, கைகளை குதிகாலில் தொட வேண்டும்.
இந்த நிலையில் மூச்சை இழுத்து நன்றாக சுவாசிக்க வேண்டும், முடி கொட்டும் பிரச்னை உள்ளவர்கள் இதனை செய்யலாம், முதுகுவலியால் அவதிப்படும் நபர்கள் இதனை தவிர்க்கவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக