முழுப்பெயர் குலசேகரம் வைரமுத்து பண்டார வன்னியன். பெரிய மெய்யனார், கயலா வன்னியன் என்று இரண்டு சகோதரர்கள் அவனுக்கு இருந்தனர்.
யாழ்ப்பாண வைபவ மாலைப் பதிவுகளின்படி சோழப் பேரரசின் காலத்தில் இலங்கையை ஆட்சிபுரிய அனுப்பப்பட்ட வட தமிழகத்து வன்னியகுல தளபதியர்களின் வழி வந்தவன். வன்னியர் என்பதற்கு வலிமையுடையோர் எனப் பொருள் கொள்ளலாம். 1621-ம் ஆண்டு போர்த்துக்கீசியர்கள் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய போதும்கூட வன்னிப் பகுதிக்குள் கால்பதிக்க முடியவில்லை. கடைசிவரை வன்னிக்குள் காலூன்ற முடியாமலேயே இலங்கையில் போர்த்துக்கீசிய அதிகாரம் முடிவுக்கு வந்தது. உண்மையில் வன்னி வணங்கா மண்தான், வன்னியர்கள் வீர மறவர்கள்தான்.
வன்னிக்குள் முதலில் வெற்றிகரமாக நுழைந்தவர்கள் டச்சுக்காரர்கள் என நாம் குறிப்பிடும் ஒல்லாந்தர்கள். 1782-ல் வன்னியை கைப்பற்ற அவர்கள் நடத்திய போர் பற்றி எழுதும் லூயி என்ற வரலாற்று ஆசிரியர் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார். "ஒல்லாந்தர்கள் எத்தனையோ நாடுகளில் போர் நடத்தியிருக்கிறார்கள். ஆனால் இப்படி வீரத்துடன் போரிட்டவர்களை உலகில் எங்கும் அவர்கள் காணவில்லை” என்று. ஒல்லாந்தர் காலத்திலும் பின்னர் ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்தும் மன்னார், திரிகோணமலை வன்னிக்காடுகள் என வன்னியர்கள் இடைவிடா கொரில்லா போர் நடத்தி வந்தனர். அவர்களில் ஒளிவிடும் மாணிக்கமாய் வந்த மாவீரன்தான் பண்டார வன்னியன்.
முல்லைத்தீவில் நின்று பண்டார வன்னியனின் வரலாற்றுத் தோளுரசியதில் மேலும் ஓர் முக்கிய செய்தியுண்டு. ஆங்கிலேய மேலாதிக்கத்திற்கெதிராய் பண்டார வன்னியன் நடத்திய கலகத்தின் உச்சம் எதுவென்றால் ஆங்கில வெள்ளையர்களின் முல்லைத்தீவு கோட்டையை அவன் முற்றாகத் தாக்கியழித்து நிர்மூலம் செய்ததுதான் அது. அதே முல்லைத்தீவில் முப்பதாண்டு கால போராட்டம் சாதித்த தமிழருக்கான ராணுவ வளங்கள் யாவும் தகர்ந்துபோய்க் கிடந்த ஓர் தருணத்தில் பண்டார வன்னியனின் வீரத்தை சமகாலத் தோழமைக்கு குறியீடாய் நிறுத்த நிச்சயம் காரணம் இல்லாமல் இருந்திருக்காது.
பண்டாரவன்னியன் முல்லைத்தீவிலிருந்து வற்றாப்பளை அம்மன் கோயில் வரையிலுள்ள 2000 சதுரமைல் நிலபரப்பை ஆட்சி செய்து வந்தான். அமைச்சராக தனது தம்பி கயிலாய வன்னியனையும், தளபதியாக கடைசி சகோதரன் பெரிய மைனரையும் கொண்ட குழுவையும் அமைத்து அரசமைப்பை பேணி வந்தான்.
பண்டாரவன்னியன் முல்லைத்தீவிலிருந்து வற்றாப்பளை அம்மன் கோயில் வரையிலுள்ள 2000 சதுரமைல் நிலபரப்பை ஆட்சி செய்து வந்தான். அமைச்சராக தனது தம்பி கயிலாய வன்னியனையும், தளபதியாக கடைசி சகோதரன் பெரிய மைனரையும் கொண்ட குழுவையும் அமைத்து அரசமைப்பை பேணி வந்தான்.
அவனது ஒரே சகோதரி பெயர் நல்ல நாச்சாள். அவளுக்கு கலைகள் கற்பிக்கும் அவை புலவன் மீது காதல் கொண்டாள். அதே நேரத்தில் வன்னி நிலத்தில் ஆண்டு வந்த இன்னொரு குறுநில மன்னாக காக்கை வன்னியன் அவளை மணம் புரிய ஆசைப்பட்டான். அதற்காக பலமுறை பண்டார வன்னியனிடம் ஓலை அனுப்பிய போதும் அவன் அதற்கு சம்மதிக்கவில்லை.
ஒரு முறை நந்தவனத்ததில் நாச்சியாள் புலவரிடம் காதல் கொண்டிருக்க கண்ட காக்கை வன்னியன் புலவரிடம் சண்டைக்கு போக புலவர் வாள் சண்டையிட்டு நையப்புடைத்து அனூப்புகிறான். இந்த சம்பவத்தால் புலவன் அரச பரம்பரையில் வந்தவனென்பதை அறிந்து கொள்கிறான். இதனால் அவர்களின் காதலுக்கு பச்சை கொடி காட்டுகிறான்.
இது ஒரு புறமிருக்க.. வன்னிநிலப்பரப்பில் பண்டாரவன்னியன் திறை செலுத்தமறுத்த காரணத்தினால் படையெடுத்து வந்து வெற்றி காண முடியாமால் வெள்ளையர்கள் புறமுதுகாட்டி பின் வாங்கினர்.
தனிப்பட்ட காரணத்தினால் பண்டரவன்னியன் மேல் ஆத்திரம் கொண்ட காக்கைவன்னியன் வெள்ளை தேசாதிபதியுடன் கூட்டு சேர்கிறான். பல முறை படையெடுத்து வெள்ளையர் தோல்வி அடைகின்றனர். அத்தருணத்தில் காக்கை வன்னியன் பண்டரா வன்னியனை தந்திரமாகத்தான் வெல்லலாமென்று ஆலோசனை கூறுகிறான். அந்த திட்டத்தின் ஒரு அங்கமாக தான் தவறை திருந்தி விட்டதாக நாடகமாடி பண்டராவன்னியனிடம் வருகிறான். தம்பிமார்களான மந்திரியும் தளபதியும் காக்கைவன்னியனை சேர்க்கவேண்டாமென்ற ஆலோசனையையும் மீறி மறப்போம் மன்னிப்போம் என்ற அடிப்படையில் அவனை சேர்த்துக்கொள்கிறான். ஆனால் தருணங்களை காத்திருந்து தருணங்கள் வர நம்பவைத்து தனிய கூட்டிவந்து ஒட்டு சுட்டான் என்னுமிடத்தில் வைத்து வெள்ளையரின் படைகளிடம் தந்திரமாக அகப்படவைக்கிறான் இந்த காக்கை வனனியன்.
இன்றும் நம்பி ஏமாற்றுவர்களை நீ காக்கை வன்னியன் பரம்பரையோ என்று ஈழத்தில் கேட்கும் வழக்கு உள்ளது.
இந்த கூத்தில் ஓரிரு சம்பவங்களை பார்க்கலாம்...
தம்பி பெரியமைனர் - "அண்ணா நமது வன்னி நாட்டைக்கைப்பற்று நோக்கம் அந்த வெள்ளைக்கார கும்பலுக்கு இருப்பதாக தெரியவில்லை. ஆனால் நமது சகோதரர்களாகிய சிங்களவர் வாழும் கண்டிப் பிரதேசத்தை கைப்பற்ற பெரும்படைகளை அனுப்பியிருக்கிறார்கள். இந்தச்சந்தர்ப்பத்தில் சிங்களமக்களுக்கு துணையாகவும் ஆங்கிலேயருக்கு எதிராகவும் வீறு கொண்டு சீறியெழும் எங்கள் படைகளை அனுப்பி வைத்தால் நன்மையாக இருக்கும்."
பண்டரா வன்னியன்: "ஆகா நல்லது தம்பி கைலாயா உமது யோசனை என் தம்பி கைலாய வன்னியன்."
"அண்ணா கண்டிக்கு நமது படைகளை அனுப்புவதால் இரண்டு நன்மைகள் உண்டு. ஒன்று சிங்கள மக்களை காப்பற்ற உதவி புரிந்ததாக இருக்கும். அடுத்தது இந்த சந்தர்பத்தில் நமது படை பலத்தை வெள்ளையருக்கு காட்டகூடியதாயிருக்கும். சுணங்கமால் நமது படைகளை கண்டிக்கு அனுப்புதல் நலம்."
பண்டாரவன்னியன்: "தம்பி பெரியமைனர் நமது நாட்டில் விளைகின்ற ஏலம், கறுவா, கராம்பு முதலிய திரவியங்களை கொள்ளையடித்து வயிறு வளர்க்கும் வெள்ளைக்கார கும்பலுக்கு இடம்கொடுக்கலாகாது. எமது உடன் பிறப்பாகிய சிங்களமக்களையும் கண்டி நாட்டையும் காப்பற்றியாக வேண்டும். எனவே தயங்காது நமது படைகளைக் கண்டிக்கு ஆயுத்தம் செய்வாயாக…"
கட்டப்பொம்மன் பாணியில் தேசாதிபதியுடனான சந்திப்பிலிருந்து ஒரு பகுதி
தேசாதிபதி: வன்னியர் வேந்தே நாங்கள் பரஸ்பர அன்பு கொண்டாடி தங்களுடன் சிநேகதர்களாக நடக்க ஆசைப்படுகிறோம்.
பண்டாரவன்னியன்: அதற்கு எந்தவித தடையுமில்லை
தேசாதிபதி: நாங்கள் காக்கை வன்னியனிடமிருந்து கரிகட்டுமூலையையும் முல்லைத்தீவையும் பெற்றுக்கொண்டோம்.
பண்டராவன்னியன்:அதனால் என்ன காக்கைவன்னியன் கொடை வள்ளல். தருமபூபதி பாரிக்கும் அடுத்தவன், இல்லாதருக்கு உள்ளதை கொடுத்தான். இதில் என்ன அதிசயம்
தேசாதிபதி:அதிசியம் இல்லாமலில்லை யாழ்ப்பாண நாடும் வன்னிபிரதேசத்தில் ஒருபகுதியும் எமது ஆங்கில ஆட்சிக்குட்பட்டது என்பது கருத்து. நீங்கள் மாத்திரம் தனித்து வாழ்வதில் அர்த்தமில்லை.
பண்டராவன்னியன்:அப்படியானால் அந்த அர்த்தத்துக்கு பயன் சொல்லிகொடுக்கவா அழைத்தீர்கள்.
தேசாதிபதி:அப்பிடியில்லை பணிந்து வாழ்ந்தால் பலனுண்டு
பண்டராவன்னியன்:பணிந்து வாழ்தல் எங்கள் பரம்பரையிலையே கிடையாது..
தோசாதிபதி:ஆணவமாக பேசினால் ஆபத்து நேரிடும்.
பண்டரா வன்னியன்: ஆபத்து உங்களைத்தான் நாடி வருகின்றது என்னையில்லை
தேசாதிபதி:வாயை அடக்கி பேசு
பண்..வன்னியன்:ஆண்டவனுக்கு அஞ்சாத பண்டரானா ஆங்கிலனுக்கு அடங்க போகிறான்
தேசாபதி:வாயை பெரும் அழிவை தேடப் போகிறீர்
பண்டரா வன்னியன்: அதற்க்காக நீங்கள் ஏன் முதலை கண்ணீர் வடிக்கிறீர்
தேசாதிபதி:ஆங்கிலையரை பகைத்தால் பண்டரா:அழிவென்று சொல்லுகிறீர்கள் அதற்க்கு அஞ்சுபவனல்ல நான்
தேசாதிபதி :பாம்புடன் விளையாடுகிறீர் பண்டரா பாம்புக்கும் பருந்தாயிருப்பேனன்றி விருந்தாயிருக்கமாட்டன்.
மாவீரன் பண்டாரவன்னியனின் 211 ஆவது நினைவு நாள் இன்றாகும். ஒல்லாந்தா் ஆட்சிக்காலத்தின் பிற்பகுதியிலும் ஆங்கிலேயா் ஆட்சிகாலத்தின் முற்பகுதியிலும். வன்னிராச்சியத்தை ஆண்ட மன்னன் குலசேகரம் வைரமுத்து பண்டாரவன்னியன்.
வெள்ளையரிற்கு அடிபயணியாது வன்னிராச்சியத்தை ஆண்டு வந்ததான். முல்லைத்தீவு கோட்டையில் வெள்ளையா்களிடம் இருந்து மீட்டு பிரங்கிகளை கைப்பற்றிய முதல் மன்னன் கற்பூரபுல் வெளியில் ஒரே வாழ்வீச்சில் 60 பேரை கொன்ற வரலாற்று நாயகன்தான் பண்டாரவன்னியன்.
பண்டாரவன்னியனின் 211 ஆம் ஆண்டு நினைவுநாளில் இன்று வீரவணக்கத்தை தெரிவித்துக்கொள்கின்றோம்.
பண்டாரவன்னியனின் 211 ஆம் ஆண்டு நினைவுநாளில் இன்று வீரவணக்கத்தை தெரிவித்துக்கொள்கின்றோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக