தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 22 அக்டோபர், 2014

மாரடைப்பை தடுக்கும் வயாகரா மாத்திரை!

மாரடைப்பை வயாகரா மாத்திரை தடுக்கும் என ஆய்வில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
வயாகரா மாத்திரைகள் ஆண்களின் ‘செக்ஸ்’ உணர்வை தூண்டக் கூடியவை. தற்போது அவை மாரடைப்பை தடுக்கும் நிவாரணி என கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
இத்தாலியில் ரோம் நகரில் உள்ள சபியன்ஷா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் வயாகரா மாத்திரை பயன்படுத்துபவர்களிடம் ஆய்வு மேற்கொண்டனர். அதன் மூலம் அவை மாரடைப்பு ஏற்படாமல் தடுக்கும் திறன் கொண்டதை அறிந்தனர்.
வயாகரா மாத்திரையில் பி.டி.இ. 5ஐ என்ற முக்கிய வேதிப்பொருள் உள்ளது. இது பி.டி.இ 5 என்ற என்சைம்களை தடுக்கிறது. இதுவே மிக மெலிதான திசுக்கள் விரிவடையாமல் தடுக்கிறது.
அதன் அடிப்படையில் பி.டிஇ. 5. என்சைம் இருதயம் விரிவடையாமல் ஒரே அளவில் இருக்க உதவுகிறது. இதனால் மாரடைப்பு ஏற்படாமல் தடுக்கப்படுகிறது.
மேலும் இருதயம் தொடர்ந்து சீராக செயல்படவும் உதவுகிறது. ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு விபரீத விளைவுகளை தருவதில்லை. மேற்கண்ட தகவல்கள் ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக