தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 29 அக்டோபர், 2014

உங்களை சுறுசுறுப்பாக வைக்கும் குளுகுளு பானங்கள்

பொதுவாக உடல் எடையை குறைக்க, கொழுப்பை கரைக்க பல பானங்கள் வந்திருப்பதை நாம் அறிந்திருப்போம்.ஆனால் நமது மூளை வளர்ச்சிக்கும், நம்மை சுறுசுறுப்பாக வைக்கவும் உதவும் பானங்கள் பற்றி எத்தனை பேருக்கு தெரியும். மேலும் இந்த வகை பானங்களில், ரசாயன கலப்படம் ஏதும் இல்லாமல் இயற்கையின் மகத்துவங்களும் நிறைந்திருக்கின்றன.
மாதுளைப்பழ சாறு
மாதுளம் பழத்தில் தனித்துவமான ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் எண்ணிலடங்காமல் உள்ளது, இவைகள் உங்கள் அறியும் ஆற்றல் மற்றும் ஞாபக திறனை மேம்படுத்த உதவும்.
இந்த பானத்தை தினமும் ஒரு கிளாஸ் பருகினால் சுறுசுறுப்பாக இருக்கலாம்.
பெர்ரி ஸ்மூத்தி
ப்ளாக்பெர்ரி மற்றும் ப்ளூபெர்ரி ஆகிய இந்த இரண்டு பெர்ரி பழங்களும் கலந்து செய்யப்படும் ஜூஸ், உங்கள் நரம்பியல் செயல்பாடுகள் மற்றும் மூளை இணைப்புகளை மேம்படுத்த உதவும்.
மேலும் மனநிலை குறைபாட்டை ஆரம்ப கட்டத்திலேயே தடுத்துவிடும். உங்கள் ஞாபக சக்தியுடன் சேர்ந்து, அறிவாற்றல் மற்றும் இயக்கத்துக்குரிய ஆற்றல்களும் கூர்மையாகும்.
பீட்ரூட், கேரட் மற்றும் ஆப்பிள் ஜூஸ்
பீட்ரூட், கேரட் மற்றும் ஆப்பிளை ஒன்றாக சேர்த்து பிழிந்தால் ஒரு விதமான ஜூஸ் கிடைக்கும்.
மூளையில் உள்ள நைட்ரிக் ஆக்சைட் உற்பத்தியை அதிகரிக்க பீட்ரூட் உதவுகிறது, கேரட்டில் பீட்டா-கரோட்டீன் உள்ளது.
மேலும் இந்த பானத்தில் ஆன்டி-ஆக்சிடன்ட்கள், வைட்டமின்கள் மற்றும் கனிமங்கள் வளமையாக உள்ளதால், இது கண்களுக்கு நன்மை அளிப்பதோடு மட்டுமல்லாமல், மூளை தேய்வையும் தடுத்து நிறுத்தும்.
சிகப்பு ஒயின்
ஒயினில் உள்ள பாலிஃபீனால்கள் மூளைக்கு செல்லும் இரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்வதால், அதன் சக்தியை அதிகரிக்க செய்யும் என்று ஆய்வுகள் கூறுகிறது.
குறிப்பாக ரெட் ஒயினில் உள்ள ரெஸ்வெராட்ரால் மூளையின் ஆரோக்கியத்திற்கு உதவிடும். ஆனால் அளவாக மட்டுமே இதை பருக வேண்டும்.
டார்க் சாக்லெட்
டார்க் சாக்லெட்டில் இருக்கும் கொக்கோவில் உள்ள ஃப்ளேவோனால்ஸ் இரத்த குழாய்களின் உட்பூச்சை அமைதியுற செய்து இரத்த அழுத்தத்தையும் குறைக்கும்.
இதனால் நாளடைவில் மூளைக்கு ஏற்பட உள்ள பாதிப்புகள் வெகுவாக குறையும்.
ஒரு கப் ஹாட் சாக்லெட் பருகினால், வாதம் மற்றும் அறிவாற்றல் குறைபாடுகள் ஏற்படும் இடர்பாடுகள் குறையும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக