தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 29 அக்டோபர், 2014

கடலின் நடுவே வியப்பூட்டும் கலங்கரை விளக்கம்! (வீடியோ இணைப்பு) !


ஸ்காட்லாந்தில் கடலில் நடுவே அமைக்கப்பட்டுள்ள உலகின் மிகப் பழமையான கலங்கரை விளக்கம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.
ஸ்காட்லாந்தின் ’அங்கஸ்’ என்ற கடற்பகுதியில் அமைந்துள்ள பெல் ராக் என்ற கலங்கரை விளக்கம் தான் உலகிலேயே மிகவும் பழமையான கலங்கரை விளக்கமாக கருதப்படுகிறது.
ராபர்ட் ஸ்டீவன்ஸன் என்பவரால் 1807ம் தொடங்கப்பட்ட கட்டுமாணப்பணி 1810ம் ஆண்டில் முடிவடைந்துள்ளது.
பின்னர் 1813ம் ஆண்டு செயல்பாட்டுக்கு வந்த இந்த கலங்கரை விளக்கம், எந்தத் தொழில்நுட்ப வளர்ச்சியும் இல்லாத அந்தக் காலத்திலேயே கடலின் நடுவிலேயே கட்டப்பட்டுள்ளதால் காண்போர் அனைவருக்கும் பெரும் பிரமிப்பையும் ஆச்சர்யத்தையும் ஏற்படுத்துகிறது.
சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்னால் கட்டப்பட்ட இந்த கலங்கரை விளக்கம் 35 அடி உயரம் கொண்டதாக விளங்குகிறது.
மேலும் இதில் இருந்து வீசும் ஒளியினை, கடலில் இருந்து சுமார் 56 கி.மீ தொலைவில் கூட காண முடியும் என்பது இதன் சிறப்பம்சம் ஆகும்.
தற்போது சுற்றுலாவாசிகள் கண்டுகளிக்க ஏதுவாக அருங்காட்சியமாக மாற்றப்பட்டுள்ளதால் ஆண்டுதோறும் பலர் இங்கு வந்து செல்கின்றனர்.
மேலும் கடலின் நடுவே கட்டப்பட்டுள்ள இந்த கலங்கரை விளக்கத்தின் உச்சியில் நின்று பார்க்கும்போது, ஆழ்கடலின் பிரம்மாண்டத்தை நம் கண்களால் உணர முடியும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக