தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 24 அக்டோபர், 2014

மழை நீரை சேமிப்போம் ..!


இயற்கையே நமக்கு தேவையான நீரை தருகிறது ..ஆனால் சரியான முறையான நீர் மேலாண்மை இல்லாததால் எல்லாம் கடலில் கலக்கிறது...! இனியாவது விழித்துக்கொள்வோம்..! 

மழை நீரை சேமிப்போம் ..! 

பொதுப்பணித்துறை புள்ளி விவரங்களின் படி, தமிழகத்தில் ஒரு ஆண்டுக்கு சராசரியாக 998 மில்லி மீட்டர் மழை பதிவாகிறது.

2005-06-ம் ஆண்டில் மட்டும் அதிகபட்ச அளவாக 2,035 மில்லி மீட்டர் மழை
2012-ம் ஆண்டில் 711.9 மில்லி மீட்டர் மழையும்,
2013-ம் ஆண்டில் 739.8 மில்லி மீட்டர் மழையும் பதிவானதாக அரசு குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடப்பாண்டில் ஜூலை மாதம் வரையிலான காலகட்டத்தில், 250.3 மில்லி மீட்டர் மழை பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஆண்டுதோறும் சேகரிக்கப்படும் நீரின் அளவு 24,0160 எம்.சி.எம்.

39 ஆயிரம் தண்ணீர் தொட்டிகள் மூலம் 347 டி.எம்.சி. சேமிக்கப்படுகிறது.

79 அணைக்கட்டுகள் மூலம் 243 டி.எம்.சி.யும்,

பிற மாநிலங்களில் இருந்து வரக்கூடிய 61 டி.எம்.சி.யும், இதர சேமிப்பான 2 டி.எம்.சி தண்ணீரும் சேமிக்கப்படுகிறது

தமிழகத்தில் குடிநீர்த் தேவைக்காக மட்டும் ஆண்டுதோறும் 51.40 டி.எம்.சி. தேவைப்படுகிறது

மாநகராட்சிகளின் குடிநீர்த் தேவைக்காக 13.80 டி.எம்.சி., நகராட்சிகளின் தேவைக்காக 9.60 டி.எம்.சி
ஊராட்சிகளின் தேவைக்காக 10 டி.எம்.சி.
கிராமப்புறங்களின் தேவைக்காக 18 டி.எம்.சி. தேவைப்படுகிறது.

குடிநீர்த் தேவையைத் தவிர்த்து, பாசன வசதிக்காக ஆண்டுதோறும் ஆயிரத்து 766 டி.எம்.சி.
தொழிற்சாலைகள் மற்றும் தொழிற்துறைக்கு 54.90 டி.எம்.சி.
மின்சார உற்பத்திக்கு 4.20 டி.எம்.சி.
, கால்நடை உள்ளிட்ட இதர தேவைகளுக்கு 18.30 டி.எம்.சி.தேவைப்படுகிறது.

ஒட்டுமொத்த அளவில் தமிழகத்திற்கு ஆண்டுதோறும் ஆயிரத்து 894.8 டி.எம்.சி. தண்ணீர் பற்றாக்குறையாக இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

ஒட்டுமொத்தமாகப் பார்க்கும் போது தமிழகத்தில் கிடைக்கப் பெறும் நீரின் அளவுக்கும், தேவைக்கும் இடையே 307.80 டி.எம்.சி. வித்தியாசம் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

புதிய தலைமுறை ..!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக