தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 24 அக்டோபர், 2014

அழகாகவும், ஆரோக்கியமாகவும் வைக்கும் உணவுகள்

நீங்கள் தினமும் சாப்பிடும் உணவுகளை பொறுத்து தான் உங்களது உடல்நலனும், அழகும் அமையும்.
தினமும் சீரான உடற்பயிற்சி, ஆரோக்கியமான உணவுகளின் மூலம் ஆரோக்கியமான மேனியுடன் வலம் வரலாம்.
முட்டை
முட்டையில் புரதம், கனிம பொருட்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன, இதனை உட்கொள்வதன் மூலம் செறிவூட்டத்தை மேம்படுத்தி, ஆரோக்கியமான எடையை பராமரிப்பதுடன், மூளை வளர்ச்சிக்கும் உதவி புரியும்.
வாழைப்பழம்
பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்துக்கள் வாழைப்பழத்தில் அதிகம் உள்ளன, எலும்பின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன் புற்றுநோய் வளர்ச்சியையும் தடுக்கிறது.
பூசணிக்காய்
ஆன்டி-ஆக்ஸிடண்ட்டுகள், வைட்டமின் ஏ, சி, கே மற்றும் ஈ, மெக்னீசியம், பொட்டாசியம் மற்றும் இரும்பு சத்துக்கள் பூசணிக்காயில் உள்ளது.
இதன் விதைகள் மற்றும் தசை என இரண்டுமே பல பயன்களை அளிக்கின்றன.
ஆரஞ்சு
ஆரஞ்சு என்றாலே வைட்டமின் சி அதிகமுள்ள பழம் என்று தெரியும், ஆஸ்துமா, சிறுநீரக கற்கள் மற்றும் இரத்த கொதிப்பு நோயாளிகளுக்கு உகந்த பழம் ஆரஞ்சு தான்.
கொலஸ்ட்ராலை குறைக்கவும், சர்க்கரை நோயை தடுக்கவும் கூட இப்பழம் உதவுகிறது.
வால்நட்
முந்திரி, பாதாம் உள்ளிட்ட சுமார் 7 வகையான கொட்டைகளுடன் ஒப்பிடும் போது அக்ரூட்டில்தான் ஆன்டி ஆக்சிடன்ட்கள் அதிகம் உள்ளது. குறிப்பாக பாலிபெனால் என்ற ஆன்டி ஆக்சிடன்ட் அபரிமிதமாக இருப்பதுதான் இதற்கு காரணம்.
இவை கொழுப்பை எளிதில் கரைக்க வல்லது என்பதுடன் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும்.
க்ரீன் டீ
தினமும் இரண்டு க்ரீன் டீ அருந்துவதால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியின் ஆற்றல் அதிகரிக்கும், கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தி இதய நோய்களையும் தடுக்கிறது.
கீரைகள்
கீரைகளில் அதிகளவும் வைட்டமின்களும், இரும்புசத்துகளும், கனிமங்களும் நிறைந்துள்ளன.
தினமும் ஏதாவது ஒரு கீரையை சமைத்து உண்பதன் மூலம் ரத்த சோகை வருவதை தடுத்து நல்ல உடல் நலனை பெறலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக