தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 22 அக்டோபர், 2014

“கடவுளின் சொந்த தோட்டம்” சுத்தமான கிராமம் (வீடியோ இணைப்பு)

சுத்தமான நீரோடைகள், அருவிகள், கண்ணை பறிக்கும் இயற்கை காட்சிகளோடு அமைந்துள்ள கிராமம் கடவுளின் சொந்த தோட்டம் என்று அழைக்கப்படுகிறது.
இந்தியாவின் மேகாலயா மாநிலத்தில் அமைந்துள்ள மாலிங்னங்(Mawlynnong) என்ற கிராமமே இவ்வாறு அழைக்கப்படுகிறது.
இந்தியா– வங்காளதேசம் எல்லையில் அமைந்துள்ள ஷில்லாங் என்னும் இடத்தில் இருந்து 90 கி.மீ இடத்தில் அமைந்துள்ள, மாலிங்னங் கிராமத்தை ஆசியாவிலேயே சுத்தமான கிராமமாக 2003ம் ஆண்டு ஒரு பிரபல பத்திரிகை தெரிவு செய்தது.
விவசாயத்தையே முக்கிய தொழிலாக கொண்டு இயங்கிவரும் இந்த கிராமத்தில் மூங்கில் மற்றும் வெற்றிலை பாக்கு தான் முக்கிய பயிராக விளங்குகிறது.
சுத்தமான கிராமம் என்று பெயர் பெற்ற பிறகு சுற்றுலாவாசிகளின் எண்ணிக்கை நாளடைவில் அதிகரித்த வண்ணமே உள்ளது.

இந்த கிராமத்தில் மக்கள் தங்கள் கிராமத்தை சுத்தமாக வைத்துகொள்ள தினமும் முயற்சியினை மேற்கொள்கின்றனர்.
அவர்கள் குழுவாக ஒன்றிணைந்து குப்பைகளை அகற்றுகின்றனர். அந்த குப்பைகளை சேகரிக்க இயற்கைக்கு ஆபத்து விளைவிக்காத மூங்கிலால் ஆன கூடைகளை பயன்படுத்துகின்றனர்.
ஸ்கை வீயூ என்றழைக்கப்படும் தரையில் இருந்து 85 அடி உயரத்தில் மூங்கில்களால் கட்டப்பட்ட பாலத்தில் இருந்து பார்த்தால் வங்காளதேசத்தின் பரப்பினை காண முடியும்.
சிறிய பாறை ஒன்றின் மீது சமநிலையாக நிற்கும் மிகப்பெரிய பாறை, வாழும் பாலம் என்றழைக்கப்படும் மரத்தின் வேர்களால் ஆன பாலத்தினையும் சுற்றுலாவாசிகள் கண்டு மெய்சிலிர்க்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக