சிலர் வேண்டாம் என்று ஒதுக்கும் தயிரில் நம் உடலுக்கு தேவையான வைட்டமின்களும், புரதச் சத்துக்களும் அடங்கியுள்ளன.
உடலுக்கு ஏற்ற அருமருந்து தயிர், குளிர்ச்சியை தருவதுடன், எளிதில் ஜீரணம் ஆகிவிடும்.
தயிரில் முக்கியமான வைட்டமின், புரதம் ஆகிய சத்துகள் அடங்கியுள்ளது.
கால்சியமும், ரிபோ பிளேவின் என்ற வைட்டமின் 'பி' யும் தயிரிலிருந்தே பெறப்படுகிறது.
சூரிய ஒளியில் பாதிக்கப்படும் நரம்புகளையும், தோல் பகுதிகளையும், தயிர் தனது ஆரோக்கியமான கலவைகளால் பாதுகாக்கிறது.
அல்சர் பிரச்னையில் இருந்து தப்பித்துக் கொள்ள தயிரை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
அல்சருக்குக் காரணமாகும் கிருமிகள் தயிர், மோரில் உள்ள லேக்டிக் அமிலத்தால் அழிக்கப்படுகிறது. அதனால் ஒரு நாளைக்கு ஒரு முறையாவது தயிரை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
* பாலைத் தயிராக மாற்றும் பாக்டீரியா குடலில் உருவாகும் நோய் கிருமி பாக்டீரியாவின் வளர்ச்சியை தடுக்கிறது.
* தயிர் புளிக்காமல் 2-3 நாள் இருக்க தேங்காய் சிறிய துண்டாக்கி சேர்த்தால் புளிக்காது.
* வெண்டைகாய் வதக்கும் பொழுது ஒரு ஸ்பூன் தயிர் சேர்த்தால் நிறம் மறாமல், பிசுபிசுக்காமல் இருக்கும்.
* வாழைப்பூ, வாழைத்தண்டு இவற்றை தயிர் கலந்த நீரில் போட்டு வைத்தால் நிறம் மாறாது.
* மண்ணெண்ணெய் வாசம் போக தயிர் கொண்டு கை கழுவலாம்.
* ஒரு கை நிறைய தயிரை எடுத்து தலையில் நன்றாக தேய்த்தால் தூக்கம் நன்றாக வரும்.
* சில தோல் வியாதிகளுக்கு மோரில் நனைந்த துணியை பாதித்த இடத்தில் கட்டி வருவது சிறந்த மருந்தாகும். தோல் வீக்க நோய்க்கு மோர் கட்டு அருமையான மருந்தாகச் செயல்படுகிறது.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக