தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 4 அக்டோபர், 2014

மாத விடாய் வலியால் அவஸ்தையா? கவலைய விடுங்க!

பொதுவாக பெண்களுக்கு மாதவிடாய் என்னும் அந்த 3 நாட்கள் பெரும் வயிற்றுவலியை ஏற்படுத்தும் என்பது அனைவரும் அறிந்த ஓர் விடயமாகும்.
இதனை கையாள சில வழிமுறைகளை நாம் பின்பற்றினால் வயிற்றுவலியிலிருந்து எளிதாக குணமடையலாம். அவை
· முருங்கை ஈர்க்கு 2 கைப்பிடி அளவு எடுத்துத் தண்ணீர் விட்டுக் காய்ச்சி வடிகட்டி, அதனுடன் வெங்காயம், சீரகம், மிளகு, நெய் கூட்டித் தேவையான உப்பும் சேர்த்து, சூப் செய்து பருகிவரலாம்.
· முள்ளு முருங்கை இலையையும் கல்யாண முருங்கை இலையையும் மிக்சியில் போட்டு லேசாகத் தண்ணீர் சேர்த்து அரைக்கவும். தினமும் காலையில் வெறும் வயிற்றில் 3 தேக்கரண்டி சாப்பிடலாம்.
· முருங்கைக் கீரையுடன் சிறிது கறுப்பு எள் சேர்த்துக் கஷாயமாக்கி ஒரு வாரம் தொடர்ந்து சாப்பிட்டு வரலாம்.
· உலர்ந்த புதினா இலையுடன் ஒரு ஸ்பூன் கறுப்பு எள் சேர்த்துக் கஷாயமாகச் செய்து சாப்பிட்டால், வலி குணமாகும்.
· கொத்தமல்லி சாறில் கருஞ்சீரகத்தை ஊற வைத்து உலர்த்திப் பொடியாக்கி, தினமும் ஒரு கிராம் அளவுக்குத் தேனில் குழைத்துச் சாப்பிட்டால் வலி குறையும்.
· சாதிக்காய், திப்பிலி, சீரகம் ஆகிய மூன்றையும் சம அளவு எடுத்துப் பொடி செய்து கொண்டு, அதனுடன் 1/4 ஸ்பூன் மோரில் கலந்து சாப்பிடலாம்.
· ஓமம், கிராம்பு இரண்டையும் சம அளவு எடுத்துப் பொடித்து, 1/4 ஸ்பூன் மோரில் கலந்து சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.
· எள் விதையை அரைத்துக் கொட்டைப் பாக்கு அளவு எடுத்து நீரில் கலந்து சாப்பிடவும்.
· ஒரு ஸ்பூன் இஞ்சிச் சாறுடன், சிறிது பெருங்காயம் சேர்த்து மோரில் கலந்து சாப்பிட்டால் வலி எளிதாக குறைந்துவிடும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக