செக்ஸ் வீரியத்தை அதிகரிப்பதற்காக பயன்படுத்தும் வயாகரா மாத்திரையால் கண்பார்வை பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
வயாகரா மாத்திரை பயன்படுத்துபவர்களின் கண் பார்வை பாதிக்கப்படுவதுடன், ஒரு சிலருக்கு கண் பார்வை பறிபோகும் அபாயமும் உள்ளது.
அவுஸ்திரேலியா நியூசவுத் வேல்ஸ் பல்லைக்கழக நிபுணர்கள் இது குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.
அதில், வயாகரா மாத்திரையில் ‘சில்டெனாபில்’ என்ற மூலக்கூறு உள்ளது. அதில் உள்ள என்னசம் கண்விழித்திரையில் இருந்து மூளைக்கு செல்லும் ஒளி சிக்னல்களை தடுத்து நிறுத்தும் சக்தி கொண்டது.
அதுவே, கண்பார்வை பாதிப்புக்கும் பார்வை பறிபோவதற்கு காரணமாக உள்ளது. இந்த சில்டெனாபில் மூலக்கூறு கண்விழித்திரையில் நிரந்தரமாக தங்கி செல்களை கொன்று பார்வையை படிப்படியாக குறைத்து பின்னர் முழுவதும் பறிபோக செய்யும்.
இந்த சோதனை நல்ல உடல் நலத்துடன் இருந்த சுண்டெலிகளில் நடத்தப்பட்டது. வயாகரா மாத்திரை கொடுத்த 2 நாளிலேயே அவற்றின் கண்பார்வையில் பாதிப்பு ஏற்பட்டதை நிபுணர்கள் கண்டுபிடித்தனர்.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக