ஆசிய விளையாட்டு குத்துசண்டைப் போட்டியில் தனக்கு அநீதி இழைக்கப்பட்டதாக கிடைத்த வெண்கலப்பதக்கத்தை திருப்பிக் கொடுத்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார் சரிதா தேவி.
நேற்று முன்தினம் நடந்த பெண்கள் குத்துச்சண்டை (60 கி.கி.) அரையிறுதியில் இந்தியாவின் சரிதா தேவி, தென் கொரியாவின் ஜினா பார்க்க்கு எதிராக சிறப்பாக செயல்பட்டபோதும், நடுவர்களின் தவறான தீர்ப்பால் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தார். இதனால் வெண்கலத்துடன் ஆறுதல் தேடினார்.
பின் இறுதிப்போட்டியில் தோல்வியடைந்த ஜினா வெள்ளி வென்றார். இதற்கான பதக்கம் வழங்கும் விழா நேற்று நடந்தது. இதில் கலந்து கொண்ட சரிதா வெண்கலப்பதக்கத்தை கழுத்தில் அணிய மறுத்து, கையில் வாங்கினார்.
சிறிது நேரம் அழுதுகொண்டே இருந்த இவர், திடீரென தனது பதக்கத்தை ஜினாவின் கழுத்தில் அணிவித்து, அவரை கட்டியணைத்துவிட்டு புறப்பட்டு சென்றார். தற்போது பதக்கம் போட்டியை நடத்தும் அதிகாரிகளின் வசம் உள்ளது.
பதக்கத்தை திருப்பி கொடுத்த சரிதா தேவி மீது சர்வதேச குத்துச்சண்டை சங்கம்(ஏ.ஐ.பி.ஏ.,) ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உள்ளது. இவருக்கு தடை விதிக்கப்படவும் வாய்ப்பு இருக்கிறது.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக