வேப்ப மரத்தில் பால் வடிவதும், அது அம்மனின் சக்தி என்றும் பலரும் சொல்ல கேள்விப்பட்டிருப்போம்.
ஆனால் அது எப்படி வேப்ப மரத்தில் பால் வடியும்? கசப்பான வேப்ப மரத்தில் வடியும் பால் தித்திக்கிறதே? என்ற கேள்விகள் மனதில் எழும்.
வேப்ப மரத்தின் அடிமரம், கிளை இவற்றுள் மாவுச்சத்து (ஸ்டார்ச்சு) நிரம்பியிருக்கிறது.
வேப்ப மரத்தின் இலைகள் இந்த மாவுச்சத்தைச் சர்க்கரையாக மாற்றும், அதன் விளைவுதான் வேப்பம் பழம் இனிப்பாக இருக்கிறது.
வேப்ப மரத்திற்கு அருகே நீர்ப்பகுதி அதிகம் இருக்கும் பட்சத்தில் மரத்தினுள் செல்லும் தண்ணீரின் அளவு அதிகமாகும்.
இதன் காரணமாக வேப்ப மரப் பட்டைக்கு அடியில் உள்ள திசு பாதிக்கப்பட்ட வெடிக்க, மரத்திலுள்ள மாவுச்சத்தில் தண்ணீர் கலந்து பால் போல் மாறுகிறது.
இந்த பாலானது, பாதிக்கப்பட்ட திசு வெடிப்பின் வழியே கசிந்து சொட்டும்.
இதனை தான் வேப்ப மரத்தில் பால் வடிகிறது என்று சொல்கிறோம்.
மரத்துக்குள் செல்லும் நீரின் அளவும் குறையும் போது, பால்வடிவது நின்று போகும்.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக