தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 18 அக்டோபர், 2014

த்வாதச லிங்க ஸ்தோத்திரம். ---------------------------



அடி முடி காணாமல் நாரணனும், நான்முகனும் ஈசனை துதிக்க, ஈசன் ஜோதி வடிவில் அவர்களுக்குக் காட்சி தந்தார். அந்நாளே கார்த்திகை தீபமாகக் கொண்டாடப்படுகிறது. பாரெங்கும் பரமன் பல்வேறு திருத்தலங்களில் பல்வேறு திருக்கோலங்களில் அருளாட்சி புரிந்தாலும் குறிப்பாக 12 சிவத்தலங்கள் ஜோதிர்லிங்கத்தலங்களாக போற்றப்படுகின்றன. கைலாயத்திலிருந்து ஐந்து ஆத்மலிங்கங்களை ஈசனிடம் பெற்று வந்து சைவத்திற்கும் சௌந்தர்யலஹரியைப் பெற்று வந்து சாக்தத்திற்கும் பேருதவி செய்த ஆதிசங்கர பகவத்பாதாள், அந்த 12 ஜோதிர்லிங்கத் தலங்களையும் தரிசித்து துதித்து அருளியுள்ளார். அந்தத் துதியை கார்த்திகை தீபத்தன்று துதித்தால் அனைத்து நலன்களும் கிட்டுவதோடு 12 ஜோதிர்லிங்கங்களை தரிசித்த மகத்தான புண்ணியமும் சேரும்.

பல நல்ல அம்சங்கள் கைவரப்பெற்ற ஸ்ரீ சைலமலையின் உச்சியிலும் சேஷாத்ரி மலையுச்சியிலும் எப்போதும் வாசம் செய்பவரும் இறப்பு, பிறப்பு எனும் இரு நிகழ்வுகளுடன் கூடிய சம்சாரம் எனும் கடலில் தத்தளிக்கும் பக்தர்களுக்கு கரையாக உள்ளவருமான மல்லிகார்ஜுனரை நமஸ்கரிக்கிறேன்.

புனிதமான தாமிரபரணி ஆற்றின் நீர் கடலில் சங்கமமாகும் இடத்தில் அணைகட்டி ராமச்சந்திரமூர்த்தியினால் வில்வதளங்களால் அர்ச்சிக்கப்பட்ட ராமேஸ்வரம் ராமநாதரை அனவரதமும் நமஸ்காரம் செய்கிறேன்.

ஓங்காரேஸ்வரரின் பாதங்களைத் தொழுகிறேன்.
வைத்யநாதரை நமஸ்காரம் செய்கிறேன்.
பரமேஸ்வரனான நாகநாதனை வணங்குகிறேன்.
காசி விஸ்வநாத மூர்த்தியை சரணடைகிறேன். த்ரயம்பகேஸ்வரரை வணங்குகிறேன்.
கேதாரேஸ்வரரை நமஸ்கரிக்கிறேன்.
திஷணேஸ்வரரான சிவபெருமானை வணங்குகிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக