தொலைக்காட்சி!!

Search This Blog

Friday, April 28, 2017

பூமியில் உலாவும் வேற்றுக்கிரகவாசிகள்! கடவுள்கள் யார்?

நவீன கால ஆய்வாளர்களும், விஞ்ஞானிகளும் தற்போது உலகம் தொடர்பில் மிகப்பெரிய உண்மையினை வெளிப்படுத்த ஆரம்பமாகியுள்ளனர்.
அதாவது பூமியானது வேற்றுக்கிரகவாசிகளின் தேவை நிமித்தம் உருவாக்கப்பட்டது. மனிதர்களை படைத்தது வேற்றுக்கிரகங்களில் இருந்து வந்தவர்களே என்பதே அது.
இது இப்போதைய மனித சமூகம் ஏற்றுக்கொள்ள மறுக்கும் என்றாலும் உண்மை இதுவே என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
பல அதிகார மட்டங்களும் இந்த உண்மைகள் வெளி வருவதனை தடுக்கின்றன. காரணம் உலகத்தில் இதனால் பல குழப்பங்களும், கட்டுப்பாடற்ற தன்மையும் ஏற்படும் என்பதால் எனக் கூறப்படுகின்றது.
பண்டைய காலங்களில் பூமிக்கு வேற்றுக்கிரகவாசிகள் வந்ததற்கான ஆதாரங்கள் பூமி முழுவதும் உள்ளன. அப்படி என்றால் அவர்கள் ஏன் வந்தார்கள்?
பூமியில் அவர்களுக்கு என்ன தேவை இருந்தது? மனிதர்களை எப்படி உருவாக்கினார்கள்? இப்போது அவர்கள் எங்கே? மதங்கள் ஏன் உருவாக்கப்பட்டன?
இவ்வாறான பல கேள்விகளோடு, வேற்றுக் கிரகவாசிகள் பற்றிய பல இரகசியங்களுக்கும் ஆய்வாளர்கள் விடை கூற முற்பட்டுள்ளனர் அவை பற்றி பார்க்கலாம்.
நாம் வாழும் இந்த பூமி நமக்காக மட்டும் படைக்கப்பட்டது, மனிதர்களுக்காக மட்டுமே படைக்கப்பட்டது என்பதனை இப்போதைய விஞ்ஞானிகள் எவருமே நம்பவில்லை.
பிரபஞ்சத்தின் தோற்றம் மற்றும் மனிதர்களின் உருவாக்கம் போன்றன பற்றி காலம் காலமாக மனித குலம் நம்பி வருவது பொய்களே. இன்று வரை ஆய்வாளர்களும் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை.
இந்த நிலையில் உலகத்தில் மனிதர்களை உருவாக்கியது வேற்றுக் கிரகவாசிகளே என்பதனை ஆய்வாளர்கள் உலக மக்களுக்கு எடுத்துக் கூற முயற்சி செய்கின்றார்கள்.
என்றாலும் கூட மதம் என்ற கட்டுக்குள் மனித இனம் திட்டமிட்டு கட்டுப்படுத்தப்பட்டு உள்ளதால் விஞ்ஞானம் மற்றும் அறிவியல் கூறும் பல உண்மைகளை ஏற்றுக் கொள்வது இல்லை.
அப்படியாக ஏதாவது கூறும் இடத்தில் வீண் வாதங்களை மதம் வாயிலாக மனித இனம் பார்ப்பதனால் பல வகை உண்மைகள் வெளிப்படுவது இல்லை. உண்மைத் தன்மை ஆராயப்படுவதும் இல்லை.
பிரபஞ்சம் உருவாகிய பின்னர் பல பில்லியன்கள் வருடங்கள் சென்ற பின்னரே பூமி உருவானதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இதனை அனைத்து தரப்பும் ஏற்றுக்கொண்டது. அதேபோல பூமி தவிர்த்து ஏனைய கிரகங்களில் உயிரினங்கள் வாழ்வதனையும் இப்போது அனைவரும் ஏற்றுக் கொண்டு விட்டார்கள்.
பூமி உருவாக்கப்பட பல பில்லியன் வருடங்களுக்கு முன்பே பிரபஞ்சம் தோன்றியது என்றால், ஏற்கனவே உருவான பிரபஞ்சத்தில் உள்ள கிரகங்களில் வேற்றுக் கிரகவாசிகள் வாழ்வது சாத்தியம்.
அவ்வாறு வாழ்ந்தவர்களே பூமி உருவான பின்னர் பூமியில் மனித இனத்தை தோற்று வித்தது என தற்போது ஆய்வாளர்கள் அடித்துக் கூறுகின்றார்கள்.
உலகம் இந்த உண்மையை அறிந்தபோதும் வெளியவிட மறுக்கின்றன. இந்த விடயத்தை ஆய்வாளர்கள் நிருவும் ஆதாரபூர்வமான தகவல்களைப் பார்க்கலாம்.
ஒட்டுமொத்த மனிதர்களுக்கும் தமது கடவுள்கள் வானில் இருந்து வந்தவர்களாக நம்புகின்றனர். அவ்வாறு வந்தவர்கள் வேற்றுக்கிரக வாசிகளே என்பது ஆய்வாளர்கள் கருத்து.
இன்று காணப்படும் ஒவ்வோர் மத ரீதியான நாகரீங்களுக்கும் பண்டைய காலத்தில் பிரம்மாண்டமான கட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
பல மத வழிபாட்டு தலங்கள் இன்றைய தொழில்நுட்பத்திற்கு சாத்தியமற்ற வகையில் கட்டப்பட்டு உள்ளது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இதனை ஆய்வாளர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்கின்றார்கள்.
இங்கு தரப்பட்டுள்ள புகைப்படங்கள் பண்டைய காலத்தில் கட்டப்பட்ட இப்போதைய மனித சக்திக்கும் சாத்தியமற்ற கட்டடங்களை காட்டுகின்றன.
இவ்வாறான கட்டடங்கள் வேற்றுக்கிரகங்களில் இருந்து வந்தவர்களின் வாழ்ந்த இடங்களாக இருக்க வேண்டும் என்பது ஆய்வாளர்களின் வாதம்.
ஆனால் காலப்போக்கில் அவை கடவுள்களின் இருப்பிடமாக மாற்றப்பட்டுள்ளது. அதாவது அப்போதைய நாகரீகம் தனது தலைவனை கடவுளாக பாவித்தாலேயே இந்த வகையில் கடவுள்கள் தோன்றியதாக கூறப்படுகின்றது.
இவை தவிர பூமி முழுதும் வேற்றுக் கிரக வாசிகள் தொடர்பிலான ஆதாரங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.
இவை அனைத்தும் பூமியின் ஆரம்ப காலப்பகுதிகளில் வேற்றுக்கிரகவாசிகள் பூமியுடன் கொண்டிருந்த தொடர்பை பற்றி தெளிவாக கூறுவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
பூமிக்கு வேற்றுக்கிரகவாசிகள் ஏன் வருகைத் தரவேண்டும்?
அமெரிக்கா நிலவில் கால் பதித்தது முதல் நிலவில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், நிலவு முழுதும் ஹிலியம் 3 (Helium 3) எனப்படும் கணிமம் நிறைந்துள்ளதாக கண்டுபிடித்தனர்.
நிலவில் மட்டுமல்லாது எமது சூரிய குடும்பத்தில் உள்ள பல கிரகங்களில் இதே வகை கணிமம் இருப்பதனையும் ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்.
இந்த ஹிலியம் 3 கணிமம் ஆனது சிறந்த எரிபொருள் ஆகும். இதனால் பூமியில் ஏற்படும் எரிபொருள் பற்றாக்குறையை பூமிக்கு அருகில் உள்ள நிலவில் இருந்து எடுத்து வந்து பயன் படுத்தும் ஆய்வில் சர்வதேசம் முனைப்பு காட்டுகின்றது.
இதே போன்று ஆரம்பகால பூமியில் மனிதர்கள் இல்லாத போது பூமியில் இருந்து வேற்றுக்கிரகவாசிகள் ஓர் கணிமத்தை எடுத்துக் கொண்டு போக வந்திருக்கலாம் என Zecharia Sitchin எனப்படும் ஆய்வாளர் தெரிவிக்கின்றார்.
அவ்வாறு அவர்கள் வந்ததற்கான ஆதாரங்களே இப்போது பூமி முழுவதும் ஆங்காங்கே சிதறிக் கிடக்கின்றன.
மேலும், பூமியில் இருந்து வேற்றுக்கிரகவாசிகள் தங்கம் எனப்படும் கணிமத்தையே கொண்டு செல்ல பூமிக்கு வந்திருக்கலாம் எனவும் அவர் கூறுகின்றார்.
ஆரம்பகாலத்தில் தங்கம் பூமியில் நிறைந்து வழிந்தது என்பதை வரலாறுகளும், புராணங்களும் கூறுகின்றன. அப்படி என்றால் அவை இப்போது எங்கே?
தங்கம் எனப்படும் மதிப்பு மிக்க கணிமம் வேற்றுக் கிரகவாசிகள் பூமியில் இருந்து கொண்டு சென்றுள்ளனர் என்கிறார் ஆய்வாளர் Zecharia Sitchin. அதனை அவர்கள் தங்களின் மின்சாரத் தேவைகளுக்கு பயன்படுத்திக் கொண்டு இருக்கலாம் எனவும் அவர் கூறுகின்றார்.
தங்கம் எனப்படுவது மின்சாதனங்களை (சேர்க்கிட்) செய்வதற்கு சிறந்த பொருள். தங்கம் சிறந்த மின் கடத்தி. அது மட்டுமல்லாது விண்வெளி ஓடங்களை நிர்மானிப்பதற்கும் தங்கம் மிக மிக முக்கியமானது.
அதேபோல் தங்கம் எக்காலத்திலும் அழியாத உலோகம் எனப்படுவதோடு தங்கம் மின் சாதன உற்பத்திக்கு மிக முக்கியம்.
இவ்வாறான தங்கத்தை கொண்டு செல்வதற்காகவே பூமிக்கு வேற்றுக் கிரகவாசிகள் வந்திருக்கலாம் என்பதும் Zecharia Sitchin ஆய்வாளரின் கருத்து. அதற்கான ஆதாரங்களை பல புத்தகங்கள் மூலம் அவர் நிருவுகின்றார்.
இதனை நிரூபிக்கும் வகையில் 90000 ஆயிரம் பழமை வாய்த தங்கச் சுரங்கங்கள் தென் ஆபிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் 50000 வருடங்கள் பழைமை வாய்ந்த தங்கச் சுரங்கம் இன்றும் பேரு நாட்டில் உள்ளது.
மனித நாகரீகம் அற்ற காலத்தில் இப்படியான தங்கச் சுரங்கம் எப்படி வந்தது என்பதை ஆழ சிந்திக்கும் போது வேற்றுக்கிரகவாசிகள் காரணம் வந்து போகின்றது. இவ்வாறான இடங்கள் பல பூமி எங்கும் உள்ளன.
நாகரீகமே வளராத காலத்தில் மனிதன் தங்கத்தை தோண்டி எடுத்தான் என்பது வேடிக்கையான விடயமே.
இதனை மேலும் வலுப்படுத்துகின்றது பேருவில் நாஸ்கா எனப்படும் தளம். மனிதர்கள் இன்று வாழாத இந்த இடம் பற்றிய இரகசியம் இன்றும் வெளிப்படுத்தப்பட வில்லை. (இங்கு ஆய்வுகள் மேற்கொள்ளப்படுவது தடை செய்யப்பட்டுள்ளது.)
சுமார் 500 சதுர கி.மீ பரப்பளவில் அமைக்கப்பட்ட இந்த இடம். 2500 ஆண்டுகளுக்கு முன்னர் அமைக்கப்பட்ட ஓர் விமான ஓடு தளம். அப்போதைய மனிதர்களால் இதனை அமைப்பது எந்த வகையிலும் சாத்தியம் அற்றது. அக்காலத்திற்கு விமானத்தளம் என்பது அவசியமே இல்லை.
வானில் இருந்து பார்த்தால் மட்டுமே தெரியும் வகையில் பிரம்மாண்டமான சித்திரங்கள் இங்கு வரையப்பட்டுள்ளன. இவை வானில் இருந்து வரும் விண்கலங்களுக்கு விடுக்கப்படும் சமிச்ஞைகளாகவே காணப்படுகின்றன.
இந்த நாஸ்கா தளம் மூலம் பூமியில் இருந்து தங்கம் கொண்டு செல்லப்பட்டிருக்க முடியும் என்பது Zecharia Sitchin ஆய்வாளரின் வாதம். இதனை பல ஆய்வாளர்கள் ஒப்புக்கொள்கின்றனர்.
இவை இவ்வாறு இருக்க.., பூமியில் மனிதர்கள் தோன்றியது எப்படி? அதனால் வேற்றுக்கிரக வாசிகளுக்கு என்ன இலாபம்? மதங்கள் எப்படி உருவாகின அடுத்து வரும் பதிவில் பார்க்கலாம்...
http://www.tamilwin.com/science/01/144046?ref=lankasri-home-dekstop

No comments:

Post a Comment