தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 16 ஏப்ரல், 2017

சிங்களம் என்றால் கருவாப்பட்டை!

கி.மு. 543-ஆம் ஆண்டு இந்தியாவின் மகத நாட்டு மன்னன் காட்டு குணம் கொண்ட தன் மகன் விஜயனையும் அவனது கஜபுல தோழர்கள் எழுநூறு பேரையும் நாட்டை விட்டு விரட்டியடிக்கிறான். செல்லுமிடம் தீர்க்கமாகத் தெரியாமல் மரக்கலமேறும் விஜயனும் அவனது அடங்காப் பிடாரிகளும் இலங்கையின் இன்றைய புத்தளத்தை அடுத்த தம்பப்பண்ணை துறையில் கரை சேர்ந்ததாக மகாவம்சம் பதிவு செய்கிறது.
அகதிகளாய் வந்திறங்கிய விஜயன் தமிழரெனக் கருதப்படும் அந்நிலத்து முற்குலமாம் நாகர் இன இளவரசி குவேனியைக் கூடியும், வடபகுதி மாதோட்ட தமிழ் குறுநில மன்னனோடு நட்பு தேடியும், தமிழகத்து பாண்டிய மன்னர்களோடு அயலுறவு அமைத்தும் இலங்கை மன்னனாக தன்னை முடிசூட்டிக்கொண்டு முப்பதாண்டு காலம் ஆட்சி புரிந்ததாய் கதை உண்டு.

விஜயன் இலங்கைக்கு அகதியாய் வந்தபோது சிங்களம் என்றொரு இனம் அங்கிருக்கவில்லை. ஆனால் தமிழரின் மூதாதையர் இருந்தனர். உண்மையில் “சிங்களம்’ என்பதே மொழி, இனம், பண்பாடு சார்ந்த சொல் அல்ல. சிங்களம் என்றால் தமிழில் கறுவாப்பட்டை. அக் காலத்தில் கடலோடி வாணிபம் செய்தோர் அத் தீவுப் பகுதியை அதிகம் தேடிப் போனது இக் கறுவாப்பட்டைக் காகத்தான். கறு வாப்பட்டை அதிகம் கிடைத்த தால் அந் நிலப்பரப்பு சிங்களத் துவீபமெனப் பட்டது.

விஜயனுக்குப் பின் பன்னிரண் டாம் அரசனாய் அசேலன் ஆண்ட காலத்தில், கி.மு.205-வாக்கில் தமிழகம் தொண்டை நாட்டினின்று ஏலேலன் என்ற இளவரசன் பெரும் படையுடன் திரிகோண மலையிறங்கி, அனுராதபுரம் சென்று அசேலனை வென்று மொத்த இலங்கைக்கும் தன்னை அரசனாய் அறிவித்தான். நடுநிலை தவறா நீதி, பொறை, அருள், ஆண்மை, அறிவுடன் இலங்கைத் தீவு முழுமைக்கும் நல்லாட்சி தந்த ஏலேலன்தான் எல்லாளன் என்று பொதுவாக அறியப்படுகிறவன்.

ஏலேலன் இலங்கை முழுதையும் ஆண்ட தமிழ்ப் பேரரசன். பண்டாரக வன்னியனோ பாரம்பரியமாய் தன் மூதாதையர்கள் வாழ்ந்த சிறு நிலப்பரப்பில் தன்மதிப்போடும், சுய அதிகாரத்தோடும் வாழ விரும்பிய மனிதன். 

அவனது முழுப்பெயர் குலசேகரம் வைரமுத்து பண்டாரக வன்னியன். பெரிய மெய்யனார், கயலா வன்னியன் என்று இரண்டு சகோதரர்கள் அவனுக்கு இருந்தனர். யாழ்ப்பாண வைபவ மாலைப் பதிவுகளின்படி சோழப் பேரரசின் காலத்தில் இலங்கையை ஆட்சிபுரிய அனுப்பப்பட்ட வட தமிழகத்து வன்னியகுல தளபதியர்களின் வழி வந்தவன். வன்னியர் என்பதற்கு வலிமையுடையோர் எனப் பொருள் கொள்ளலாம். 1621-ம் ஆண்டு போர்த்துக்கீசியர்கள் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய போதும்கூட வன்னிப் பகுதிக்குள் கால்பதிக்க முடியவில்லை. கடைசிவரை வன்னிக்குள் காலூன்ற முடியாமலேயே இலங்கையில் போர்த்துக்கீசிய அதிகாரம் முடிவுக்கு வந்தது. உண்மையில் வன்னி வணங்கா மண்தான், வன்னியர்கள் வீர மறவர்கள்தான்.

வன்னிக்குள் முதலில் வெற்றிகரமாக நுழைந்தவர்கள் டச்சுக்காரர்கள் என நாம் குறிப்பிடும் ஒல்லாந்தர்கள். 1782-ல் வன்னியை கைப்பற்ற அவர்கள் நடத்திய போர் பற்றி எழுதும் லூயி என்ற வரலாற்று ஆசிரியர் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார். “”ஒல்லாந்தர்கள் எத்தனையோ நாடுகளில் போர் நடத்தியிருக் கிறார்கள். ஆனால் இப்படி வீரத்துடன் போரிட்டவர்களை உலகில் எங்கும் அவர்கள் காணவில்லை” என்று. ஒல்லாந்தர் காலத்திலும் பின்னர் ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்தும் மன்னார், திரிகோணமலை வன்னிக்காடுகள் என வன்னியர்கள் இடைவிடா கொரில்லா போர் நடத்தி வந்தனர். அவர்களில் ஒளிவிடும் மாணிக்கமாய் வந்த மாவீரன்தான் பண்டார வன்னியன்.

ஆங்கிலேய மேலாதிக்கத்திற்கெதிராய் பண்டாரகவன்னியன் நடத்திய கலகத்தின் உச்சம் எதுவென்றால் ஆங்கில வெள்ளையர் களின் முல்லைத்தீவு கோட்டையை அவன் முற்றாகத் தாக்கியழித்து நிர்மூலம் செய்ததுதான் அது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக