தொலைக்காட்சி!!

Search This Blog

Friday, April 28, 2017

இதய நோய் வராமல் தடுக்க...

இன்றைய காலத்தில் இதய நோயால் பாதிக்கப் பட் டுள்ளவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அன்று 90 முதல் 100 வயது வரை ஆரோக்கியமாக இருந்து மறைந்தவர்கள் ஒரு புறம், இன்று 30 மற்றும் 40 களிலேயே மருத்துவ காப்பீட்டினை முழுமையாக பயன்படுத்தும் நிலவரம்! அந்த வகையில் இன்றைய தலைமுறையை ஆட்டிப்படைக்கும் மோசமான நோயாக இதயநோய் இருக்கிறது.
உண்ணும் உணவு முறைப்பார்த்தால், நிச்சயம் இதய நோய் வரலாம் . ஏனெனில் எப்போதும் கொலஸ்ட்ரால் அதிகம் உள்ள உணவுகளான பீட்சா, பர்க்கர் போன்றவ ற்றை சாப்பிடுவது, மதுபானத்தை அளவுக்கு அதிக மாக அருந்துவது, புகைப்பிடிப்பது என்றெல்லாம் இருந் தால், இதயம் பாதிப்படையாமல் ஆரோக்கியமாக இருக்குமா என்ன? அதுமட்டுமின்றி அளவுக்கு அதிக மான வேலைப்பளு இருந்தாலும், இதயம் பெரிதும் பாதிக்கப்படும். ஏனெனில் இந்த நேரம், மனமானது பெரிதும் பாதிக்கப்பட்டு, இதயத்தில் அதிகமான அழு த்தம் ஏற்படுகிறது. எனவே இத் தகைய பாதிப்பு இதய த்தில் ஏற்படாமல் இருக்கவும், பாதிக்கப்பட்டுள்ள இத யம் குணமாகவும் ஒருசிலவற்றை மனதில் கொண்டு, அதனை பின்பற்றி வந்தால், இதயத்தை ஆரோக்கிய மாக வைத்துக் கொள்வதோடு, உடலையே ஆரோக்கிய மாக வைத்துக் கொள்ளலாம்.
புகைப்பிடிப்பது.........
இதயத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தும் செயல்களில் புகைப்பிடிப்பது முக்கியமான ஒன்று. ஏனெனில் சிக ரெட்டில் இருக்கும் புகையிலையானது, இதயத்தின் ஆரோக்கியத்தை கெடுக்கும் பொருட்களில் ஒன்று. எனவே புகைப்பிடிப்பதை தவிர்த்தால், இதய நோய் வராமல் தடுக்கலாம்.
கொலஸ்ட்ரால்...........
கொலஸ்ட்ரால் அளவு அதிகமாக இருந்தால், அவை கரோனரி இதய நோயை உண்டாக்கும். எப்படி என் றால் இவ் உணவுகளை சாப்பிடும்போது, அதில் உள்ள கொலஸ்ட்ரால், தமனிகளின் சுவர்களில் அதிகமாக தங்கி, தமனிகளின் அளவை குறைந்து, ரத்த ஓட்ட த்தை தடுக்கும். எனவே எப்போதும் கொலஸ்ட்ரால் அதிகம் உள்ள உணவு களை சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. அதிலும் கொலஸ்ட்ரால் அளவானது 200-க்கு குறைவாக இருக்க வேண்டும்.
உடல் எடை..........
இதய ஆரோக்கியத்தை கெடுப்பதில் அதிக உடல் எடையும் முக்கிய பங்கு வகிக்கிறது. சொல்லப்போ னால், தற்போது மாரடைப்பு வருபவர்களின் உடலைப் பார்த்தால், அவர்களது உடல் எடை யானது, அளவுக்கு அதிகமாக இருக்கும். எனவே உடல் எடையில் கவன மாக இருக்க வேண்டும்.
உடற்பயிற்சி.............
தினமும் உடற்பயிற்சி செய் வது மிகவும் அவசியமான ஒரு செயல்களில் ஒன்று. தினமும் குறைந்தது 30 நிமி டம் உடற்பயிற்சி செய்தால் உடலில் ரத்த ஓட்டம் சீராக இருக்கும்.
நீரிழிவு...........
ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருந்தா லும், இதயம் பாதிக்கப்படும். ஏனென்றால் நீரிழிவும் ஒரு வகையில் இதய நோயை உண்டாக்கும். அதிலும் குறிப்பாக ஆண்களை விட பெண் களுக்கு பெரிய அளவில் ஆபத்தை விரைவில் ஏற்படுத்தும். எனவே நீரிழிவை தடுக்கும் உணவுகளை டயட்டில் மேற் கொள்வது அவசியம்.
உணவுகள்.........
டயட்டில் இருக்கும் போது, குறைந்த கொழுப்புள்ள உணவுகள், பழங்கள், காய்கறிகள், தானியங்கள் மற் றும் நார்ச்சத்துள்ள உணவுகள் போன்றவற்றை அதி கம் சாப்பிட்டால், இதயநோய் வருவதை தடுக்க முடி யும். குறிப்பாக பச்சை இலைக் காய்கறிகள் மற்றும் வைட்டமின் “சி” நிறைந்தை பழங்கள் மற்றும் காய் கறிகள் இதயத்தை பாதுகாக்கும்.
ஆல்கஹால்.........
ஆல்கஹாலை சரியான அளவு குடித்தால், இதய நோய் வருவதை தடுக்கலாம் என்று விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர். ஆனால் அதையே அதிகம் சாப்பிட் டால், ரத்த அழுத்தம் அதிகரிப்பதோடு, மார்பக புற்று நோயும் வரும். எனவே அளவாக, டானிக் போன்று சாப்பிடுவது நல்லது.
ட்ரான்ஸ் கொழுப்புகள்......
பேட்டி ஆசிட்களில், ட்ரான்ஸ் பேட்டி ஆசிட் உள்ள உண வுகளை சாப்பிட்டால், இதய நோய் வருவதற்கான அபாயம் அதிகம் உள்ளது. இந்த கொழுப்புகள் மிகவும் கொடுமையானது. எனவே இவற்றை அறவே தவிர்க்க வேண்டும். இத்தகைய ட்ரான்ஸ் கொழுப்புகள் இறை ச்சிகளில் அதிகம் இருக்கும். குறிப்பாக மாட்டிறைச்சி யில் அதிகம் இருக்கும்.
வைட்டமின்களில் கவனம்........
ஆன்டிஆக்ஸிடன்ட்களை வழங்கும் வைட்டமின்கள் உடலுக்கு மிகவும் அவசியம். அதிலும் வைட்டமின் ஈ மற்றும் போலேட் மற்றும் வைட்டமின் பி6 போன்ற ஹோமோசைஸ்டீனை குறைக்கும் ஏஜென்ட்களை உடலில் சேர்க்கும் போது, அவை இதய நோய் வராமல் தடுக்கும். ஆனால் அந்த ஹோமோசைஸ்டீன் அளவு க்கு அதிகமாக இருந்தால், அதிக கொழுப்புக்கள் உட லில் இருந்தால் எப்படி இதயத்திற்கு ஆபத்தை விளை விக்குமோ, அதே அளவு ஆபத்தை உருவாக்கும். இந்த ஹோமோசைஸ்டீனை குறைக்க மருந்துகள் எதுவும் சாப்பிடாமல்,போலிக் ஆசிட் மற்றும் வைட் டமின் பி12 உள்ள உணவுகளை சாப்பிட்டால், ஹோமோசைஸ் டீனை சரியான அளவில் பராமரித்து வரலாம்.
மனஅழுத்தம்.........
அதிகமான வேலைப்பளுவின் காரணமாக நிறைய பேர் மனஅழுத்தத்தால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். மன அழுத்தம் ஏற்படும் போது இதயத்திற்கு அதிக மான அழுத்தம் ஏற்பட்டு, இதயத்திற்கு பெரும் பாதிப்பு ஏற்படும். எனவே மனஅழுத்தம் ஏற்படும் போது, அப் போது அதனை குறைக்க தியானம், மூச்சு விடும் பயி ற்சி போன்ற மனதை ரிலாக்ஸ் செய்யும் பயிற்சிகளை செய்து வந்தால், இதயத்திற்கு பாதிப்பு ஏற்படாமல் தடுக்கலாம். இவ்வாறு செய்யும் போது உடலில் ரத்த ஓட்டமானது சீராக அனைத்து உறுப்புகளுக்கும் பாயும்.
மருத்துவ ஆலோசனை.........
குடும்பநல மருத்துவரிடம் அவ்வப்போது உடல் நிலையை அறிந்து கொள்ள வேண்டும். அவ்வாறு பரிசோதிக்கும் போது, ஏதாவது குறைபாடு உடலில் தென்பட்டால், அதனை சரிசெய்ய என்னென்ன உணவு களை உட்கொள்ள வேண்டும் என்று ஆலோசனை பெற்று, அந்த உணவுகளை தவறாமல் சாப்பிட வேண் டும். இதனாலும் இதய நோய் வராமல் தடுக்கலாம். ஏனெனில் அனைவருக்குமே ஒரே மாதிரியான நிலை யில் உடலானது இருக்காது, எனவே மருத்துவ ஆலோச னையை மேற்கொள்ளவேண்டும். கொழுப்பின் அளவை தொடர்ச்சியாக பரிசோதித்தல் ஒவ்வொரு வருடமும் உடலிலுள்ள கொழுப்பின் அளவை தவறா மல் பரிசோதித்து அறிவது, இதயம் பலவீனமடைவதை தடுப்பதற்கான முதன்மையான வழிமுறையாகும். இவ்வாறு கொழுப்பின் அளவினை அறிவதன் மூலம் உடலுக்கு கொடுக்க வேண்டிய சரியான அளவிலான உணவு, உடற் பயிற்சி ஆகியவற்றை அறிந்து, அவ ற்றை முறையாக பயன்படுத்துவதன் மூலமாக ஆரோக்கியத்தைப் பெறலாம். மேற்கண்ட வழிமுறை களை தவறாமல் பின்பற்றும் போது, பலமான இதய த்தை கொண்டவராகவும் மற்றும் இதய நோய்களிலிரு ந்து விடுதலை பெற்றவராகவும் இருக்க முடியும்.

No comments:

Post a Comment