இலங்கை விசாவின் அனுமதிப்பத்திர வகைகள்
இலங்கைக்குள் பிரவேசிக்கவும் அல்லது அங்கு தங்கி இருக்கவும் அனுமதி வழங்கும் நான்கு வகையான விசாக்கள் உள்ளன.
1.வருகைதரல் விசா
வருகைதரல் விசா என்பது வெளிநாட்டவர் ஒருவருக்கு இலங்கைக்குள் பிரவேசிக்க இலங்கை அரசாங்கத்தின் விருப்பத்தை தெரிவிக்கின்ற அனுமதிப் பத்திரம் ஆகும். இந்த விசா அனுமதிப் பத்திரத்தில் நாட்டுக்குள் தங்கியிருக்கக்கூடிய காலப் பகுதியும் நிபந்தனைகளும் அடங்கி இருக்கும்.
2.சுற்றுலா வருகைதரல் விசா அனுமதிப் பத்திரம்
குறுகிய காலப்பகுதிக்குள் இலங்கையில் தங்கியிருக்க கருதுகின்ற சுற்றுலாப் பயணிகளுக்கு சுற்றுலா வருகைதரல் விசா அனுமதிப் பத்திரம் விநியோகிக்கப்படும்.
3.வதிவிட விசா அனுமதிப் பத்திரம்
வதிவிட விசா அனுமதிப் பத்திரம் என்பது விசேட கருமங்களுக்காக வதிவிட வசதிகளைப் பெற்றுக் கொள்ள விரும்புகின்ற இலங்கையர் அல்லாத ஆட்களுக்கு விநியோகிக்கப்படுகின்ற அனுமதிப்பத்திரமாகும். வதியும் விசா அனுமதிப் பத்திர வகையில் எட்டு உப வகைகள் உள்ளன.
வதிவிட விசாவை பெற்றக்கொள்வதற்கான தகமைகள்
1.தொழில் வாய்ப்பு வகையினம்
- இலங்கை முதலீட்டுச் சபையின் கீழ் அமுலாகி வருகின்ற கருத்திட்டங்களில் சேவையில் ஈடுபட்டுள்ள வெளிநாட்டவர்களும் அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட கருத்திட்டங்களில் சேவையாற்ற அவசியமான தொழில்வாண்மையாளர்களும்.
- வங்கிகளில் சேவையில் ஈடுபட்டுள்ளவர்களும் அவர்களில் தங்கி வாழ்வோரும்.
- தொண்டர்கள்
- அரச சார்பற்ற நிறுவனங்களுடன் தொடர்புடைய ஆட்கள்
- இலங்கைத் தூதரகங்களின் கீழ் உள்ள நிறுவனங்களிலும் அமைப்பாண்மைகளிலும் சேவையில் ஈடுபட்டுள்ள ஆட்கள்.
- தனியார் கம்பனியொன்றில் சேவையில் ஈடுபட்டுள்ளவர்களும் அவர்களில் தங்கிவாழ்வோரும்.
2. முதலீட்டு வகையினம்
- இலங்கையில் நிதி முதலீட்டினை செய்ய விரும்புகின்றவர்கள்.
- இலங்கையில் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளவர்கள்.
3. மாணவர் வகையினம்
- பல்கலைக்கழக மாணவர்கள்
- அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களின் மாணவர்கள்
- பிற நிறுவனங்கள்
4. 1954 இந்திய - இலங்கை உடன்படிக்கையில் அடங்கும் பதிவு செய்த இந்தியர்கள்
5. முன்னாள் இலங்கையர்களும் அவர்களில் தங்கிவாழ்வோரும்
6. இலங்கையரொருவரின் குடும்ப அங்கத்தவர்கள்
- வாழ்க்கைத்துணை
- வெளிநாட்டு பிரசாவுரிமை கொண்ட சிறுவர்கள்
விசா கட்டணம் பெற தகுதியற்றவர்களாக கருதப்படுகிறவர்கள்
- இலங்கை இரட்டைப் பிரசாவுரிமையை வைத்திருப்பவர்கள்.
- பிரசாவுரிமைச் சட்டத்தின் 5(2) பிரிவின் கீழ் பதிவு செய்துள்ள பிறப்பினைக்கொண்ட சிறுவர்கள்.
- இலங்கையில் பிறந்த 21 வயதிற்குக்குறைந்த இலங்கையரின் பிள்ளைகள்.
இலங்கை விசா அனுமதிப் பத்திரத்தினை பெறுவதற்கான பொதுவான தகமைகள்
- நீங்கள் இலங்கைக்குள் பிரவேசிக்கப் பொருத்தமானவரென இலங்கை குடிவரவு - குடியகல்வு அதிகாரிகள் திருப்தியுறும் வேளையில்.
- இலங்கைக்குள் பிரவேசிக்கும் நோக்கத்திற்கு இலங்கை குடிவரவு - குடியகல்வு அதிகாரிகள் அனுமதி வழங்கும் வேளையில்.
- நீங்கள் இலங்கைக்கு வருகை தரும் தினத்தில் இருந்து குறைந்த பட்சம் ஆறு மாதங்களுக்கு செல்லுபடியாகும் கடவுச்சீட்டொன்றினை வைத்திருக்கும் வேளையில்.
- இலங்கையில் நீங்கள் கழிக்கும் காலப் பகுதிக்குள் உங்களின் பராமரிப்புக்காகவும், உங்களின் வெளிநாட்டுக் கடவுச்சீட்டினை விநியோகித்த நாட்டுக்கு திரும்பிச் செல்லவும் போதுமானளவு நிதியம் உங்களிடம் இருப்பதாக குடிவரவு - குடியகல்வு அதிகாரிகள் திருப்தியடையும் வேளையில்.
- நீங்கள் ஒரு நாட்டுக்கான வருகைதரல் விசா அனுமதிப் பத்திரம் உடையவரெனில் நீங்கள் வசிக்கும் நாட்டுக்கோ அல்லது நீங்கள் கருதியுள்ள அடுத்த பயண முடிவிட நாட்டுக்கான எழுத்திலான அனுமதி உங்களிடம் இருக்குமிடத்து.
வருகைதரல் விசாவிற்கான பொதுவான நிபந்தனைகள்
- இலங்கையில் நீங்கள் தங்கியிருக்கும் காலப்பகுதியில் விசா அனுமதிப் பத்திரத்தில் குறிப்பிட்டுள்ள விடயத்தைத் தவிர கொடுப்பனவுடனான அல்லது கொடுப்பனவற்ற எந்தவொரு தொழிலிலோ வியாபாரத்திலோ தொழில் முயற்சியிலோ ஈடுபடலாகாது.
- விசா அனுமதிப் பத்திரத்தில் குறிக்கப்பட்டுள்ள காலாவதியாகும் திகதிக்கு முன்னராக உங்களின் விசா பயன்படுத்தப்படல் வேண்டும்.
- உங்கள் விசா அனுமதிப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள காலப் பகுதிக்குள் மாத்திரம் இலங்கைக்கு வருகை தர உங்களின் விசா அனுமதிப்பத்திரம் செல்லுபடியாகும்.
- விசா அனுமதிப்பத்திர நீடிப்புக்கான கோரிக்கைகள் அனைத்தும் குடிவரவு - குடியகல்வுத் திணைக்களத்திடம் சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.
விசா தொடர்பான மேலதிக தகவல்களுக்கு..
Hotline : 0094 71 9967888
Telephone : 0094 11 5329307
Fax : 0094 11 2674631
E-Mail : eta@immigration.gov.lk
Web Site: www.immigration.gov.lk
http://www.tamilwin.com/srilanka/01/141862?ref=lankasri-home-dekstop
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக