தொலைக்காட்சி!!

Search This Blog

Monday, April 3, 2017

வாய்ப்புண், பல் வலியா? உடனே இதனை செய்திடுங்கள்

உடலில் ஏற்படும் சிறுசிறு உபாதைகளுக்கு கூட மருத்துவரை நாடாமல் அன்றாடம் வீட்டில் பயன்படுத்தும் பொருள்களை கொண்டு சரிசெய்யலாம்.
மூக்கடைப்பு
ஒரே அளவில் மிளகு, சீரகம், இலவங்கபட்டை மற்றும் ஏலக்காய் போன்றவற்றினை எடுத்து நன்றாக அரைத்து அந்த பொடியினை முகர்ந்து பார்த்தால் மூக்கடைப்பிலிருந்து விடுதலை கிடைக்கும்.
வாய்ப்புண்
ஒரு ஸ்பூன் உப்பினை வெதுவெதுப்பான நீரில் கலந்து வாய் கொப்பளிப்பதால் வாயில் உள்ள கிருமிகள் மற்றும் பாக்டீரியாக்கள் கொல்லப்பட்டு வாய்ப்புண் சரியாகும்.

பித்தநீர் கட்டி
நாம் உண்ணும் உணவானது சரியாக செரிக்காவிட்டால் உண்டாகும் பித்தநீர் கட்டிகள் குழாய்களை அடைத்து கொண்டு செரிமான பிரச்சனைகளை உண்டாக்கும்.
எலுமிச்சை சாற்றினை மிளகு தூளுடன் கலந்து ஆலிவ் எண்ணெயுடன் குடித்தால் பித்தநீர் கட்டிகள் சரியாகும்.

உடல் எடை குறைய
கால் ஸ்பூன் மிளகு தூள்,எலுமிச்சை சாறு, ஒரு ஸ்பூன் தேன் ஆகியவற்றினை வெதுவெதுப்பான நீரில் கலந்து தினம் காலை வெறும் வயிற்றில் குடித்தால் உடல் எடையானது குறையும்.

பல்வலி
தினமும் இருமுறை பல்துலக்கி, இனிப்பான உணவுகளை தவிர்த்து அரை ஸ்பூன் மிளகுதூளுடன் கிராம்பு எண்ணெய் கலந்து வலியுள்ள பல்லில் தடவ வந்தால் பல்வலி குறையும்.

http://news.lankasri.com/medical/03/122545?ref=right_featured

No comments:

Post a Comment