ஜோதிடத்தின் படி, ஒருவரது பிறந்த நேரம் என்பது மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. ஏனெனில் பிறந்த நேரம் ஒருவரது வாழ்வில் பாதிப்புகள் மற்றும் செல்வாக்குகளை வெளிகாட்டும்.
அதில் பகல் நேரத்தில் பிறந்தவர்களை விட, இரவு நேரத்தில் பிறந்தவர்களது குணங்கள் முற்றிலும் வேறுபட்டிருக்கும். இப்போது இக்கட்டுரையில், இரவு நேரத்தில் பிறந்தவர்களின் குணங்கள் எப்படி இருக்கும் என்பது குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.
உண்மை #1
சூரிய அஸ்தமனத்திற்கு பின் மற்றும் சந்திரன் உதிக்கும் நேரத்தில் பிறந்தவர்கள் நல்ல சிந்தனையாளர்கள். இந்நேரத்தில் பிறந்தவர்கள் கலை மற்றும் இசையில் நல்ல ரசனைமிக்கவர்களாக இருப்பர்.
உண்மை #2
இரவு நேரத்தில் பிறந்தவர்கள், தங்கள் தாய் மீது அதிக ஈடுபாடு கொண்டவர்களாக இருப்பர். இவர்களிடம் ஏதேனும் ஒரு விஷயத்தைப் பற்றி கருத்துக்களைக் கேட்டால், பல விஷயத்தைக் கண்காணித்து, நிமிடத்தில் பதிலளிப்பார்கள்.
உண்மை #3
இரவில் பிறந்தவர்கள், அதிக தன்னம்பிக்கை கொண்டவர்களாக இருப்பர். இவர்களை அடக்க யாராலும் முடியாது. இத்தகையவர்கள் பகலை விட, இரவில் நன்கு செயல்படக்கூடியவர்களாக இருப்பர்.
உண்மை #4
இரவு நேரத்தில் பிறந்தவர்கள் மிகவும் உற்சாகமானவர்களாகவும், அதிக விருப்பமுள்ளவர்களாகவும் இருப்பர். இத்தகையவர்களது பிரம்மாண்டமான கற்பனை திறனால், இவர்கள் நல்ல கற்பனை வளம் மிக்கவர்களாக திகழ்வர்.
உண்மை #5
இத்தகைய நேரத்தில் பிறந்தவர்கள் புத்தி கூர்மையுடனும், சிறந்த விமர்சகராகவும் இருக்க விரும்புவர். இவர்கள் சமீபத்திய செய்திகள் மற்றும் தற்போதைய உலக நடப்புகள் வரை அனைத்தையும் தெரிந்து வைத்திருப்பார்கள்.
இத்தகையவர்களுக்கு நல்ல நண்பர் பட்டாளம் இருக்கும். நீங்கள் இரவில் பிறந்தவர்களா? அப்படியெனில் உங்களது கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
- See more at: http://www.manithan.com/news/20170419126507#sthash.OZt6loVz.dpuf
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக