தொலைக்காட்சி!!

Search This Blog

Saturday, April 22, 2017

மூடர்களின் சொர்க்கம்!

புவி நாள் (Earth Day) என்பது ஆண்டுதோறும் ஏப்ரல் 22 அன்று புவியின் சுற்றுச் சூழலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, சூழல் மாசடைவதைத் தடுக்கும் நோக்கோடு அனைத்து நாடுகளும் கடைப்பிடிக்கும் ஓர் நாள் ஆகும்.
இந்த புவி நாளானது 1970ஆம் ஆண்டு முதலாக கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. என்ற போதும் அன்றிருந்த நிலை இன்று இல்லை என்பதும் உண்மையே.
இன்று புவிநாளை முன்னிட்டு நாசா புவி தொடர்பில் விசேட புகைப்படங்களை வெளியிட்டுள்ளது.
பூமி இவ்வளவு அழகானதா? என்ற வகையில் ரசனை மிகு சிந்தனையை ஏற்படுத்துகின்றது இந்த புகைப்படங்கள். இதன் மூலம் வாழும் சொர்க்கத்தை நாசா புகைப்படமாக காட்டியுள்ளதாக கூறப்படுகின்றது.
ஆனாலும் இந்த பூமியின் அழகை கெடுப்பவர் யார்? மனிதர்களே. எப்போதோ இருந்த பூமியா இன்று உள்ளது? இந்தக் கேள்விக்கு சட்டென்று பதில் வரும் மாற்றத்தை தவிர மற்றவை அனைத்துமே மாறிப்போகும் என.
மாற்றத்தை தோற்று விப்பதே நாம் (மனிதர்கள்). ஆனால் இதனை ஏற்றுக் கொள்ளுவது என்பது சற்று கடினமே.
மனிதர் அறிவுக்கு எட்டியவரை அதிசய வாழிடமாக புவியே காணப்படுகின்றது. இன்று வரை பதில் கண்டுபிடிக்க முடியாத விசித்திரங்கள் பூமி முழுவதும் சிதறிக் கிடக்கின்றன.
எவ்வாறாயினும் இப்போதைய சூழலில் புவி பல்வேறு மாற்றங்களை அடைந்து விட்டது. அதனால் காலநிலையும் தான்தோன்றித்தனமாக செயற்படுகின்றது.
பூமியே பூமியை அழித்து விடவேண்டும் என்ற நிலை கூட ஏற்பட்டுக் கொண்டு வருவதாகவும் இதனைக் கூற முடியும். எவ்வாறாயினும் நாம் வாழும் பூமியை காக்க வேண்டியது மனிதர்களின் முக்கிய கடமையே.
http://www.tamilwin.com/world/01/143433?ref=lankasri-home-dekstop

No comments:

Post a Comment