தொலைக்காட்சி!!

Search This Blog

Wednesday, April 19, 2017

வெளிநாட்டில் வேலை தேடுபவர்களா? இலங்கையர்களின் விசேட கவனத்திற்கு..

வெளிநாட்டில் வேலை தேடும் போது இசைவுச் சான்றிதழை பெற்றுக் கொள்ள வேண்டும்.
அந்த வகையில் இலங்கையின் பிரஜையொருவர் வெளிநாட்டில் வேலை தேட முற்படும் போதே இந்த ஆவணம் பெறப்பட வேண்டும்.
அந்த வகையில் இந்த ஆவணத்தை பெறுவதற்கான படிமுறைகள்
படி 1 : விண்ணப்பதாரர் 500 ரூபாவை பொலிஸ் தலைமையகத்தில் செலுத்தி விண்ணப்ப படிவத்தை பெறுதல்.
படி 2 : விண்ணப்பதாரர் படிவத்தை பூர்த்தி செய்து பொலிஸ் தலைமையகம், கொழும்பு என்ற முகவரியில் விண்ணப்பத்தை சமர்ப்பித்தல்.
படி 3 : கொழும்பில் உள்ள பொலிஸ் தலைமையகம் விண்ணப்பத்தை பார்த்து மற்றும் பகுதி பொலிஸ் நிலையத்திலிருந்து விண்ணப்பதாரர் எங்கே வசித்தார் என்ற தெளிவான அறிக்கையை சமர்ப்பித்தல் தொடர்பில் தீர்மானித்தல்.
குறிப்பு 01
விண்ணப்பதாரர் இலங்கையில் வெவ்வேறு இடத்தில் இருந்தாலும் பொலிஸ் தலைமையகம் அந்த பகுதி தொடர்பான பொலிஸ் நிலையத்திலிருந்து விண்ணப்பதாரரை பற்றிய விபரங்களை தெளிவான அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்.
படி 4 : பொலிஸ் தலைமையகம் விண்ணப்பத்தை குற்றப்புலனாய்வு அதிகாரியின் (CID) பார்வைக்காக சமர்ப்பிக்கும். உள்துறை இண்டலிஜன்ஸ் மற்றும் தேசிய அடையாள அட்டை வழங்கும் திணைக்களத்திற்கும் சரிபார்க்க அனுப்பி வைக்கப்படும்.
படி 5 : விபரங்கள் திருப்தி அளித்தால் விண்ணப்பதாரர் பொலிஸ் தலைமையகத்தில் இசைவு சான்றிதழ் பெற்றுக் கொள்ளலாம்.
விண்ணப்பப்படிவத்தை சமர்ப்பிக்க வேண்டிய இடம்
விண்ணப்பதாரர் விண்ணப்பப்படிவத்தை (DOP APCC) பொலிஸ் தலைமையகம், கோட்டை, கொழும்பு-01 இலிருந்து பெற வேண்டும்.
விண்ணப்பப்படிவம்
படிவத்தின் பெயர் : பொலிஸ் இசைவுசான்றிதழுக்கான விண்ணப்பம் (DOP APCC)
செயல்முறை நேரம்
3 மாதத்திற்குள்
சேவை தொடர்பான கட்டணங்கள்
பொலிஸ் தலைமையகத்தில் விண்ணப்பப்படிவத்திற்கு விண்ணப்பதாரர் 500 ரூபாவை செலுத்த வேண்டும்.
மேலதிக விபரங்களுக்கு..
பொலிஸ் திணைக்களம்
பொலிஸ் தலைமையகம், கொழும்பு -01.
தொலைபேசி: +94-11-2421111 / +94-11-2327711-2-3
தொலைநகல்: +94-11-234553
மின்னஞ்சல்: telligp@police.lk
http://www.tamilwin.com/srilanka/01/143056?ref=lankasri-home-dekstop

No comments:

Post a Comment