தொலைக்காட்சி!!

Search This Blog

Tuesday, April 25, 2017

101 வயதில் 100 மீட்டர் ஓட்டப்போட்டியில் தங்க பதக்கம் வென்ற மூதாட்டி


101 வயதில் 100 மீட்டர் ஓட்டப்போட்டியில் தங்க பதக்கம் வென்ற  மூதாட்டி
நியூசிலாந்தின் ஒக்லாந்தில் நடைபெற்ற உலக மாஸ்டர்ஸ் போட்டியின் 100 மீட்டர் ஓட்டத்தில் இந்தியாவின் 101 வயதான மூதாட்டி தங்க பதக்கம் வென்று சாதனைப் படைத்துள்ளார். 100 மீட்டர் ஓட்டப் போட்டியில் கலந்து கொண்ட மான் கவுர் என்ற 101 வயதான மூதாட்டி குறித்த தூரத்தை 74 நொடிகளில் கடந்து தங்க பதக்கம் வென்றுள்ளார்.
இதே தூரத்தை 2009-ல் 64.42 வினாடிகளில் கடந்த சாதனைப் படைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 100 வயதிற்கு மேற்பட்டோருக்கான பிரிவில் இவருடன் யாரும் கலந்து போட்டியிட போட்டியாளர்கள் எவரும் இல்லாதபோதும் தீவிர மருத்துவ பரிசோதனைக்குப்பின் போட்டி அமைப்பாளர்கள் அவரை ஓட சம்மதித்திருந்தனர்.
ஆவர் தனது மகனுடன் சேர்ந்து ஏராளமான தடகள போட்டியில் கலந்து கொண்டுள்ளார். 100 மீட்டர் ஓட்டத்தை தொடர்ந்து 200 மீட்டர் ஓட்டம், இரண்டு கிலோ எடையுள்ள குண்டு எறிதல், 400 கிராம் எடைகொண்ட ஈட்டி எறிதல் போட்டிகளிலும் கலந்து கொள்ள திட்டமிட்டுள்ளார்.
93 வயது வரை மேன் கவுர் தடகளத்தில் கலந்து கொண்டது கிடையாது, அவரது மகன் குர்தேவ் சிங், சர்வதேச மாஸ்டர்ஸ் போட்டி வட்டாரத்தில் கலந்து கொள்ள ஊக்கப்படுத்தியதனடிப்படையில்தான் தடகளத்தில் பங்கேற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
- See more at: http://www.asrilanka.com/2017/04/24/43691#sthash.LgKf6Uni.dpuf

http://www.msn.com/nl-nl/video/viral/106-jarige-is-youtube-sensatie/vi-BBAex1N?ocid=sf

No comments:

Post a Comment