தொலைக்காட்சி!!

Search This Blog

Thursday, April 6, 2017

கனவில் வாழை மரம் வந்துச்சா? என்ன பலனா இருக்கும்

நாம் ஆழ்ந்து தூங்கும் போது நமக்கு கனவுகள் வருகிறது. ஒவ்வொரு கனவிற்கும் ஒவ்வொரு பலன்கள் உள்ளது. அதேபோல் நாம் கனவு காணும் நேரத்தினை பொருத்தும் பலன்கள் மாறுபடும்.
நாம் இரவில் மாலை 6- 8.24 மணிக்குள் கண்ட கனவு 1 வருடத்திலும், இரவு 8.24 -10.48 மணிக்குள் காணும் கனவு 3ம் மாதத்திலும், இரவு 10.48 – 1.12 மணிக்குள்ளாக நாம் காணும் கனவானது 1ம் மாதத்திலும், இரவு 1.12- 3.36 மணிக்குள்ளாக காணும் கனவு 10 தினங்களிலும், விடியற்காலை 3.36 -6.00 மணிக்குள் காணும் கனவானது உடனே பலிக்கும் என சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது.
பகலில் நாம் காணும் கனவிற்கு பலன்கள் இல்லை எனவும் சாஸ்திரம் கூறுகிறது.
கனவுகளில் பலன்கள்
புளிய மரம் நிறையக் காய்த்திருப்பது போல் கனவு கண்டால் அதிக வருமானம் சேரும். கிளை தொழில் தொடங்க வாய்ப்புகள் அதிகம்.
அரசமரத்தினை கனவில் கண்டால் அரச பதவி, அனுகூலம் கிடைக்கும். அரசாங்கத்தில் மேன்மை கிடைக்கும்.
ஆல மரம் கனவில் வந்தால், உங்களைச் சார்ந்தவர்களுக்கு உடல்நலக் கோளாறுகள் ஏற்படும்.
வேப்ப மரம் கனவில் வந்தால் குலதெய்வ வழிபாடு செய்வது நல்லது.
மா மரம் கனவில் வந்தால் கல்யாண வாய்ப்பு கைகூடும்.
பலா மரம் காய்த்திருப்பது போல் கனவு கண்டால், குடும்பத்தில் பாகப்பிரிவினை சுமுகமாக முடியும்.
நெல்லி மரம் கனவில் வந்தால் பணக்கவலை தீரும்.
வாழை மரம் குலை தள்ளியது போல் கனவு கண்டால், குழந்தைப்பேறு கிட்டும் என்று கனவு சாஸ்திரம் சொல்கிறது.
எலுமிச்சம்பழத்தைக் காண்பது நல்லது. தனக்கு ஒருவர் கொடுப்பதாகக் கண்டால் தொழிலில் விருத்தி, சகல பாக்கியங்களும் பெருகும்.
பேனா அல்லது எழுதுகோல் எதையேனும் கண்டால் கடிதம் மூலமாக பொருள் வரவு ஏற்படும்.
குருவிகள் தன் குஞ்சுகளுக்கு இரையூட்டுவது போலவும் தன் குடும்பத்துடன் இருப்பதையும் கண்டால் வாழ்க்கையில் சந்தோஷம் ஏற்படும்.
குருவி தன் வீட்டில் கூடு கட்டுவதாகக் கண்டால் திருமணமாகாதவருக்கு திருமணமும் திருமணமாகியிருந்தால் புத்திர பாக்கியமும் உண்டாகும்.
பழங்களை ஒருவர் தனக்கு கொடுப்பதாகவோ, உண்பதாகவோ கனவு கண்டால் செய்யும் காரியம் வெற்றியாகும்.
ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் விளையாடுவது போலவோ, சிரித்து மகிழ்வது போலவோ கனவு கண்டால் சந்தோஷமும் மகிழ்ச்சியும் நிலைக்கும்.
கழுதை, குதிரையை கனவில் கண்டால் வழக்குகள் சாதகமாக முடியும்.
உயரத்தில் இருந்து விழுவது போல் கனவு கண்டால் பணம், பாராட்டு குவியும்.
தெய்வங்களை கனவில் கண்டால் புதையல் கிடைக்கும்.
இறந்தவர்களின் சடலத்தைக் கனவில் கண்டால் சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும்.
திருமணமாகாதோர் பாம்பு கடித்து ரத்தம் வருவது போல் கனவு கண்டால், சீக்கிரம் திருமணம் நிகழும். திருமணமானோருக்கு செல்வம் வந்து சேரும்.

No comments:

Post a Comment