தொலைக்காட்சி!!

Search This Blog

Saturday, April 1, 2017

துன்பங்கள் நீங்க எந்த ராசிக்காரர்கள் என்ன செய்ய வேண்டும்?

ராசிகளை பொருத்து துன்பத்தினை போக்குவதற்கு அனைவரும் பரிகாரங்களையும் பூஜைகளையும் மேற்கொள்வர்.
வெற்றிலை பரிகாரத்தினை செய்வதன் மூலம் அனைத்து ராசிகாரர்களும் துன்பங்களை தவிர்க்கலாம்.
மேஷம்
வெற்றிலையில் மாம்பழம் வைத்து செவ்வாய்கிழமை முருகனை வழிபட்டு சாப்பிட துன்பங்கள் அகலும்.
ரிஷபம்
வெற்றிலையில் மிளகு வைத்து செவ்வாய்கிழமை ராகுவை வழிப்பட்டு சாப்பிட்டால் துன்பங்கள் விலகும்.
மிதுனம்
வெற்றிலையில் வாழைப்பழம் வைத்து புதன்கிழமை இஷ்டதெய்வத்தினை வணங்கி சாப்பிட்டால் துன்பம் தீரும்.
கடகம்
வெற்றிலையில் மாதுளம்பழம் வைத்து வெள்ளிகிழமை காளி தெய்வத்தை வணங்கி சாப்பிட்டால் துன்பம் விலகும்.
சிம்மம்
வியாழக்கிழமையன்று வெற்றிலையில் வாழைப்பழம் வைத்து இஷ்டதெய்வத்தினை வணங்கி சாப்பிட்டால் கஷ்டம் விலகும்.
கன்னி
வெற்றிலையில் வியாழக்கிழமையன்று மிளகு வைத்து இஷ்டதெய்வத்தினை வணங்கி சாப்பிட்டால் துன்பம் தீரும்.
துலாம்
வெற்றிலையில் கிராம்பு வைத்து வெள்ளிகிழமை இஷ்ட தெய்வத்தினை வழிபட்டு சாப்பிட்டால் துன்பம் தீரும்.
விருச்சிகம்
வெற்றிலையில் பேரிச்சம்பழம் வைத்து செவ்வாய்கிழமை இஷ்ட தெய்வத்தினை வழிபட்டு சாப்பிட்டால் துயரம் தீரும்.
தனுசு
வெற்றிலையில் கல்கண்டு வைத்து வியாழக்கிழமை இஷ்ட தெய்வத்தினை வணங்கி சாப்பிட்டால் கவலை தீரும்.
மகரம்
அச்சு வெல்லத்தினை சனிக்கிழமையன்று வெற்றிலையில் வைத்து காளி தெய்வத்தினை வணங்கி சாப்பிட்டால் துன்பம் விலகும்.
கும்பம்
வெற்றிலையில் நெய் வைத்து சனிக்கிழமை காளி தெய்வத்தினை வணங்கி சாப்பிட்டால் கவலை தீரும்.
மீனம்
ஞாயிற்றுகிழமை இஷ்ட தெய்வத்தினை வழிபட்டு வெற்றிலையில் சர்க்கரை வைத்து சாப்பிட்டால் நோய் தீரும்.
http://news.lankasri.com/astrology/03/122470?ref=lankasritop

No comments:

Post a Comment