கயவர்கள் கோபம் வந்தால் கல்லு இருபாதியாக உடைவது போலப் பிரிந்து எக்காலத்திலும் யாராலும் ஒன்று சேர்க்க முடியாத பகையாளிகளாக இருந்து விடுவார்கள்! இன்னும் சிலரோ கோபம் வரும் போது பொன் உடைவது போல இரண்டாகப் பிரிவார்கள்! அவர்களை இடையில் யாராவது புகுந்து பொன்னை உருக்கி ஒட்டுவது போல சமாதானம் செய்து சேர்த்து வைக்க முடியும்! ஆனால் அறிவாளிகளின் கோபத்தினால் ஏற்படும் பிரிவானது ஒரு வில்லை வளைத்து தண்ணீரைக் கிழித்துக் கொண்டு செல்லும் வண்ணம் ஒரு அம்பைச் செலுத்தினால் அம்பு
முன்னே செல்ல எப்படிப் பிளவு பட்ட தண்ணீர் உடனேயே யாருடைய உதவியும் இன்றித் தானாகவே ஒன்று சேர்ந்து விடுமோ அது போல மீண்டும் உடனேயே ஒன்றாகி விடும்! கோபத்தை மனதில் வைத்துச் சாதிக்க மாட்டார்கள்!
கற்பிளவோடு ஒப்பர் கயவர் கடும்சினத்துப்
பொற்பிளவோடு ஒப்பாரும் போல்வாரே – விற்பிடித்து
நீர்கிழிய எய்த வடுப்போல் மாறுமே
சீரொழுகு சான்றோர் சினம்!
ஒளவையார் – வாக்குண்டாம் பாடல் 23.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக