ஒரு ஊரில் ஒரு பெரிய பணக்கார வியாபாரி இருந்தான். அந்த வியாபாரிக்கு நான்கு மனைவிகள். அவனது முதல் மனைவி தான் உண்மையான வாழ்க்கை துணையாகவும், அவனது தொழில் மற்றும் சொத்துகளையும் பேணிக்காத்து வந்தால். அவள் தனது கணவனை மிகவும் நேசித்த போதிலும், அவன், மற்ற மனைவிகளை தான் விரும்பினான்.
ஒரு நாள் அந்த வணிகன் உடல்நலக் குறைவு ஏற்பட்டு மரண படுக்கைக்கு தள்ளப்பட்டான். அந்த நேரத்தில், தனது ஆசைக்கும், விருப்பத்திற்குமான கடைசி மனைவியை தன்னுடன் தங்கியிருக்க கூறினான்.....
நான்காம் மனைவியின் பதில்...
"நீ என் அருகில் இருந்து என்னைக் கவனித்துக் கொள்வாயா?" என்று கேட்டான். அவள் என்னல் முடியாது.." என கூறி கணவனை அம்போவென விட்டுப் சென்றுவிட்டாள். நான்காவது மனைவியின் பதில் அந்த வியாபாரியை மிகவும் மன வருத்தம் அடைய செய்தது.
மூன்றாவது மனைவியின் பதில்...
பிறகு அந்த வியாபாரி தனது மூன்றாவது மனைவியை அழைத்தான்....
அதற்கு அவள், "முடியாது. இவ்வுலக வாழ்க்கை எவ்வளவு இன்பமானது, நீங்கள் இறந்தவுடன் நான் மறுமணம் செய்து கொள்ளலாமென்று இருக்கிறேன்." என கூறி கணவனை அம்போவென விட்டுப் சென்றுவிட்டாள். இதை கேட்டதும் மரண படுக்கையில் இருந்த வியாபாரியின் மனம் உடைந்தே போனது.
இரண்டாவது மனைவியின் பதில்...
பிறகு அந்த வியாபாரி தனது இரண்டாவது மனைவியை அழைத்தான்....
அதற்கு அவள், "நான் மிகவும் வருந்துகிறேன். இந்த முறை நான் உங்களுக்கு உதவி செய்ய முடியாது. வேண்டுமென்றால் நான் உங்களை நல்ல முறையில் அடக்கம் செய்து விடுகிறேன்" என கூறி கணவனை அம்போவென விட்டுப் சென்றுவிட்டாள். இந்த பதிலை வியாபாரியால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை.
முதல் மனைவியின் பதில்...
மிகவும் சோகத்தில் ஆழ்ந்திருந்த வியாபாரியை கண்டு முதல் மனைவி...
"நான் உங்களுடனே வருவேன், நீங்கள் எங்கே சென்றாலும் நான் உங்களைப் பின்பற்றுவேன்" என கூறு ஆறுதலாக பேசினால். ஆனால், முதல் மனைவியோ, உணவு குறைபாட்டால் மெலிந்து காணப்பட்டாள். வியாபாரி, "நான் நன்றாக இருந்த சமயம், உன்னைக் கவனித்திருக்க வேண்டும்.." என கூறி தனது வருத்தத்தை வெளிப்படுத்தினான்.
யார் இந்த நான்கு மனைவிகள்?
இந்த கதையில் வரும் வணிகனை போல் நம் எல்லோருக்கும் நான்கு மனைவிகள் இருக்கிறார்கள்.
நான்காம் மனைவி:
நம்முடைய உடல் அழகு . அது நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக அதற்கு எவ்வளவு நேரம் செலவழித்தாலும், நாம் இறக்கும் போது அது நம்மோடு வராது.
மூன்றாம் மனைவி:
நம்முடைய உடமைகள். சொத்து, பதவி போன்றவை நாம் இறந்த பின்பு வேறொருவருடையவராகி விடுகிறது.
இரண்டாம் மனைவி:
என்பது நம்முடைய குடும்பமும், நண்பர்களும். எவ்வளவுதான் அவர்கள் நம்முடன் நெருக்கமாக இருந்தாலும், அவர்கள் கல்லறை எரியூட்டுமிடம் வரைதான் நம்முடன் வருவார்கள்.
முதல் மனைவி:
நம்முடைய ஆன்மா. பொருள், சொத்து மற்றும் சுக போகத்தை நாடும் பொருட்டு அதைக் கவனிக்காமல் விட்டு விடுகிறோம். எனவே சாகும் நேரத்தில் புலம்புகிறோம்.
யோசிங்க!
எனவே, வாழ்க்கையின் உண்மையை அறிந்து, எது நம்முடன் கடைசிவரை தங்கும், எது தற்காலிகமானது என்பதை தெளிந்த அறிவுடன் அறிந்து, நல்ல முறையில் வாழ கற்றுக் கொள்ளுங்கள்.
- See more at: http://www.manithan.com/news/20170420126521?ref=youmaylike3#sthash.pWnmDg1C.dpuf
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக