தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 13 ஏப்ரல், 2017

நெற்றியை வைத்து உங்கள் வாழ்நாளை கணிக்கலாம்

ஒருவரின் நெற்றியினை வைத்தே அவரது குணங்கள் மற்றும் வயதினை கூறிவிடலாம்.
சாமுத்திரிகா லட்சணத்தின்படி புடைப்பான நெற்றி, வெற்று நெற்றி, அடி நெற்றி என்னும் மூன்று வகைகள் உள்ளது.
இந்த நெற்றிகளில் உள்ள கோட்டினை வைத்தே நாம் எவ்வளவு காலம் வாழ்வோம் என்பதையும் கணிக்க முடியும்.
புடைப்பு நெற்றி
வழக்கத்தை விட சற்று புடைப்பாகவும், மென்மையாக கோடுகள் நன்கு தெரியும்படி சுத்தமாக இருக்கும்.
அடி நெற்றி
சற்றே உள்வாங்கி தோல் நிறத்தை விட அடர்ந்த நிறத்தில் இருக்கும், அதில் கோடுகளை கண்டறிவது கடினம்.

வெற்று நெற்றி
தலைக்கும் முகத்திற்கும் தொடர்புடையதாக இருக்கும், கோடுகள் தோன்றும், ஆனால் கண்டறிவது கடினம்.

வாழ்நாள் கணிப்பது எப்படி?
  • நெற்றியில் இரண்டு ஆழமான கோடுகள் இருந்தால் 60-65 வயது வரை வாழும் இவர்கள் ஆளுமைத்திறன் கொண்டவர்களாகவும், புகழ் மற்றும் செழிப்புடன் வாழ்பவர்களாகவும் இருப்பர். ஏதேனும் ஒரு கோட்டில் வெட்டு இருந்தால் அவர் பல போராட்டங்களை சந்திக்க நேரிடும்.
  • நன்கு தெரியக்கூடிய மூன்று கோடுகளை பெற்றவர்கள் 75- அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகள் வாழ்வார்கள். இவர்கள் நல்லதொரு வாழ்க்கை பயணத்தினை அனுபவிப்பார்கள்.
  • நான்கு கோடுகளை கொண்டு சற்றே உள்வாங்கிய அடி நெற்றியினை உடையவர்கள் 75ஆண்டுகள் வரை உயிர் வாழ்வார்கள்.
  • ஐந்து கோடுகள் கொண்ட வெற்று நெற்றியினை கொண்டவர்கள் 100வயது வரை ஆரோக்கியமான வாழ்க்கையினை வாழ்வார்களாம்.
  • பல வெட்டுகளுடன் சுமார் 5 கோடுகளை கொண்ட புடைப்பு மற்றும் வெற்று நெற்றியினை உடையவர்களின் ஆயுள்காலம் மிக குறைவாம்.
  • நெற்றியில் கோடுகள் இல்லாமல் இருப்பவர்களும் 45-50 ஆண்டுகள் மட்டுமே வாழ்வராம்.
  • இதே போன்று நெற்றியினை பொருத்து குணாதிசயங்களையும் அறிந்து கொள்ள முடியும்.
  • அகலமான நெற்றியினை கொண்டவர்கள் விரைந்து கற்று கொள்ளும் திறமையினை உடையவர்கள்.
  • குறுகிய நெற்றியினை உடையவர்கள் எளிதில் உணர்ச்சி வசப்படுபவர்களாகவும், மனதை கேட்டே முடிவு எடுப்பவர்களாகவும் இருப்பர்.
  • நேர் நெற்றி உடையவர்கள் எதையும் விடாமுயற்சியுடன் கையாள்வார்கள்.
  • வளைந்த நெற்றியினை உடையவர்கள் எல்லாரது கவனத்தினை ஈர்ப்பவர்களாக இருப்பர்.
  • இரட்டை வளைவு நெற்றி கொண்டவர்களுக்கு கற்பனைதிறன் அதிகம்.
  • மலை வடிவ நெற்றி கொண்டவர்கள் தன்னம்பிக்கை உடையவர்கள். அதேபோன்று கூர்மையான நெற்றியினை உடையவர்கள் பிடிவாத குணம் கொண்டவர்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக