தொலைக்காட்சி!!

Search This Blog

Sunday, April 16, 2017

ஆஸ்திரேலிய நாட்டின் முக்கிய அடையாளச் சின்னங்களில் இதுவும் ஒன்று!!

பொம்மைக் கரடி (Koala-கோவாலா/ கோலா)
==============================
ஆஸ்திரேலிய மக்களால் மிகவும் கூடுதலாக விரும்பப்படும் ஓர் பிராணியாக Koala- கோவாலா உள்ளன, மிகவும் அழகானதும் சாதுவானதுமான பிராணியாக இது உள்ளது.
அஸ்திரேலியாவில் மட்டுமே காணக்கூடிய பாலூட்டி வகையைச் சேர்ந்த இவ் சிறு விலங்கு அஸ்திரேலிய நாட்டின் ஒரு முக்கியமான அடையாளச் சின்னமாகக் கருதப்படுகிறது.
கிழக்கு ஆஸ்திரேலிய மாநிலங்களில் மட்டுமே காணப்படும் இது பொம்மை போன்ற உருவ அமைப்பைக் கொண்டிருப்பதால் பொம்மைக் கரடி என்றும், மரத்திலேயே வசிப்பதால் மரக்கரடி என்றும் அழைக்கப்படுகிறது, மேலும் native bear, monkey bear என்றும் சொல்லப்படுகிறது. குயின்ஸ்லாந்து, நியூ சவுத் வேல்ஸ், விக்டோரியா மற்றும் தெற்கு ஆஸ்திரேலிய பகுதிகளில் இவை அதிக அளவில் காணப்படுகின்றன.
இவைகள் பெரும்பாலும் தனக்குத் தேவையான தண்ணீரை அது சாப்பிடும் யூக்கலிப்ரஸ் (eucalyptus) மரங்களின் இலைகளிலிருந்தே பெற்றுக் கொள்கின்றன.
பெண் கோவாலாக்களுக்கு யூக்கலிப்ரஸ் (eucalyptus) இலையிலிருந்து கிடைக்கும் தண்ணீரே போதுமானது. பெரிய ஆண் கோவாலாக்கள் மரப் பொந்துகளில் இருக்கும் நீரையும், தரையில் இறங்கி வந்து கிடைக்கும் நீரையும் குடித்து தாகத்தைத் தீர்த்துக் கொள்கின்றன. தினமும் 400 கிராம் யூக்கலிப்ரஸ் இலைகளை 5 அல்லது 6 தடவையாகச் சாப்பிடுகின்றன.
இதன் முரடான பாதங்களும் கால்களில் உள்ள கூரிய நகங்களும் மரங்களைப் பிடித்து ஏறுவதற்கு உதவுகின்றன. கோவாலா உடம்பில் சாம்பல் நிற வழுவழுப்பான உரோமங்களையும், ஸ்பூன் வடிவ அகன்ற கருப்பு நிற மூக்கினையும், பஞ்சு போன்ற காதுகளையும், 4-லிருந்து 15 கிலோ எடையையும் கொண்டதாக இருக்கும். 13லிருந்து 18 ஆண்டுகள் வரை உயிர்வாழக் கூடியன. ஆஸ்திரேலியாவில் காணப்படும் 600 வகையான யூக்கலிப்ரஸ் (eucalyptus) மரங்களுள் 50 வகையான மரங்களின் இலைகளைத் தேர்ந்தெடுத்துச் சாப்பிடுகின்றன.
கோடைக்காலத்தில் உறுதியான தாழ்ந்த மரக்கிளையில் தொங்கிக் கொண்டு ஓய்வு எடுக்கும். குளிர்காலத்தில் பந்து போல சுருண்டு படுத்துக்கொள்ளும். வேறு மரத்திற்குச் செல்ல வேண்டும் என்றால் மட்டுமே மரத்தைவிட்டுக் கீழே இறங்கும். பிறந்த பின் ஓர் ஆண்டுவரை தாயின் பாதுகாப்பில்தான் இருக்கும்.
ஆஸ்திரேலியாவின் முக்கியமான அடையாளச் சின்னமான கோவாலாக்கள் ஆஸ்திரேலிய மக்களை மட்டும்மல்லாது உல்லாச பயணிகளையும், ஆஸ்திரேலியாவுக்கு வருகைதரும் அனைத்து அரச விருந்தினர்களையும் மிகவும் கவரும் பிராணியாகவும் உள்ளது.
No comments:

Post a Comment