தொலைக்காட்சி!!

Search This Blog

Sunday, April 23, 2017

இலங்கையில் 100 வயதை கடந்தும் அசத்தும் வயோதிப பெண்!

இலங்கையில் 100 வயதை தாண்டியும் ஆரோக்கியமாக வாழும் வயோதிப பெண் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.
மாவனெல்ல, கெஹேல்பன்னல பிரதேசத்தில் 100 வயதுடைய பெண் ஒருவர் தற்போதும் ஆரோக்கியமாக வாழ்ந்து வருகிறார்.
ஜாமுனி கொல பிஞ்சி என்ற வயோதிப பெண்ணே இவ்வாறு நூறு வயதினை தாண்டியும் ஆரோக்கியமாக வாழ்ந்து வருகிறார்.
பாட்டியின் வயது 100 என்ற போதிலும், அவரது வயது நூற்றுக்கும் அதிகம் என அந்த கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.
எனினும் அவரது அடையாள அட்டைக்கமைய 1917ஆம் ஆண்டு மார்ச் மாதம் 20ஆம் திகதி அவர் பிறந்துள்ளார் என குறிப்பிடப்படுகின்றன.
அதற்கமைய நூறு வயதுடையவர் மாவனெல்ல பிரதேச செயலாளர் எல்லைக்கு சொந்தமான பகுதியில் வாழ்ந்து வருகின்றார்.
பொதுவாக இந்த கிராமத்திற்கு நடந்து செல்வதென்றால், கிட்டத்தட்ட ஒரு மணித்தியாலங்கள் செல்லும் என குறிப்பிடப்படுகின்றது.
இலங்கையை வெள்ளையர்கள் ஆட்சி செய்த காலப்பகுதியில் தனக்கு அந்த பகுதியில் வீடு ஒன்றை கட்டிக் கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டதாக குறித்த வயோதிப பெண் தெரிவித்துள்ளார்.
வெள்ளையர்களின் தோட்டங்களில் தேயிலைகளை வளர்த்து, அவர்களிடம் சம்பளம் பெற்று வாழ்க்கை நடத்தி வந்துள்ளார்.
உக்கு என்ற நபரை திருமணம் செய்திருந்தார். அந்த திருமணத்தின் பின்னர் அந்த கிராமத்திலேயே தனது பிள்ளைகளை வளர்த்து வாழ்க்கையை நடத்தி வந்துள்ளார்.
திருமணம் செய்ததன் பின்னர் அந்த பகுதிக்கு வருகைத்தந்தவர், முதலாவதாக கம்பளை வெடகதெனிய கிராமத்தில் வாழ்ந்துள்ளார்.
அவருக்கு பிறந்த 10 பிள்ளைகளில் ஏழு பேர் ஆண் பிள்ளைகள் என தெரிவிக்கப்படுகின்றது. தற்போது அவர் தனது கடைசி மகனின் வீட்டில் வாழ்ந்து வருகின்றார். கடைசி மகனின் மனைவி அவரை தனது பெற்ற தாய் போன்று பாதுகாப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
http://www.tamilwin.com/community/01/143491?ref=lankasri-home-dekstop

No comments:

Post a Comment